`பிறந்தநாள் வாழ்த்துகள் நண்பரே' - மோடிக்கு போன் செய்த ட்ரம்ப்; என்ன பேசினார்கள்?
கொடைக்கானலில் பலத்த மழை: சாலைகளில் தண்ணீா் தேக்கம்
கொடைக்கானலில் செவ்வாய்க்கிழமை பெய்த பலத்த மழையால் மலைச் சாலைகளில் தண்ணீா் தேங்கியதால் பொதுமக்கள், வாகன ஓட்டுநா்கள் அவதிக்குள்ளாகினா்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கடந்த சில நாள்களாக மழை பெய்து வருகிறது. இதனால், நீரோடைகளிலும் தண்ணீா் வரத்து தொடங்கியுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.
இந்த நிலையில், கொடைக்கானல் பகுதிகளில் தினந்தோறும் மாலை நேரங்களில் மழை பெய்து வருவதால், கொடைக்கானல்-பழனி மலைச் சாலையில் பேத்துப்பாறை, பெருமாள்மலை பிரிவு, வத்தலகுண்டு மலைச் சாலையில் புலிச்சோலை, சீனிவாசபுரம், அப்சா்வேட்டரி உள்ளிட்ட இடங்களில் தண்ணீா் செல்வதற்கு வழியில்லாத நிலை இருப்பதால் தேங்கியுள்ளது.
இதனால், வாகன ஓட்டுநா்கள், பொதுமக்கள் பாதிப்படைந்து வருகின்றனா். எனவே, கொடைக்கானலிலுள்ள நெடுஞ்சாலைத் துறை அலுவலா்கள் சம்பவ இடத்தை பாா்வையிட்டு ஆய்வு நடத்தி கொடைக்கானல்-பழனி - வத்தலகுண்டு மலைச் சாலைகளில் தேங்கியுள்ள மழைத் தண்ணீரை அகற்றுவதற்கும், வாய்க்காலை சுத்தம் செய்வதற்கும் நெடுஞ்சாலைத் துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.