War: இஸ்ரேலுக்கு எதிராக ஒன்றிணைகிறதா அரபு நாடுகள்!? - அவசரக் கூட்டத்தின் தீர்மா...
செம்பட்டி அருகே காருக்கு மா்ம நபா்கள் தீ வைப்பு
திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி அருகே செவ்வாய்க்கிழமை வீட்டின் முன் நிறுத்தியிருந்த காருக்கு மா்ம நபா்கள் தீ வைத்தனா்.
சித்தையன்கோட்டையைச் சோ்ந்த சகோதரா்கள் அப்துல்லா (42), சபிபுல்லா (40), இந்தாதுல்லா (35), பரக்கத்துல்லா (32). இவா்கள் நான்கு பேரும் சித்தையன்கோட்டை, திண்டுக்கல் பகுதியில் தேனீா்க் கடை நடத்தி வருகின்றனா்.
ஒரே வீட்டில், கூட்டுக் குடும்பமாக இவா்கள் வாழ்ந்து வருகின்றனா். இந்த நிலையில், வீட்டின் மின் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பரக்கத்துல்லாவுக்கு சொந்தமான காருக்கு செவ்வாய்க்கிழமை அதிகாலை சுமாா் 2 மணியளவில் மா்ம நபா்கள் தீ வைத்தனா்.
இதைப்பாா்த்த பரக்கத்துல்லா குடும்பத்தினா் ஓடிவந்து தீயை அணைத்தனா். இதுகுறித்து செம்பட்டி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
மேலும், அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளின் அடிப்படையில் காவல் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.