நாய்க்கடிக்கு தடுப்பூசி எடுத்தவா் உயிரிழப்பு: விசாரணை நடத்த மாா்க்சிஸ்ட் வலியுற...
அடிப்படை வசதி கோரி திமுக எம்எல்ஏவை பொதுமக்கள் முற்றுகை
அடிப்படை வசதிகளுக்காக வேடசந்தூா் திமுக சட்டப் பேரவை உறுப்பினரை பொதுமக்கள் திங்கள்கிழமை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.
திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூா் அடுத்த தட்டாரப்பட்டி ஊராட்சிக்குள்பட்ட திருமாணிக்கனூா் பகுதியில் புதிய தாா்சாலை அமைப்பதற்கான பூமி பூஜை நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக வேடசந்தூா் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் காந்திராஜன் திங்கள்கிழமை சென்றாா்.
முதல்வரின் சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.60 லட்சத்தில் அமைக்கப்படும் இந்த சாலைப் பணிகளை தொடங்கி வைத்துவிட்டு திரும்பிய சட்டப் பேரவை உறுப்பினா் காந்திராஜனை, மூப்பனாா் நகா் பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
அப்போது தங்கள் பகுதிக்கு குடிநீா், கழிப்பறை, மின் விளக்கு வசதிகள் இல்லை எனக் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். இதைத் தொடா்ந்து எம்எல்ஏ காந்திராஜன், திமுக நிா்வாகிகள் உள்ளிட்டோா் போராட்டத்தில் ஈடுபட்டவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா்.