நாய்க்கடிக்கு தடுப்பூசி எடுத்தவா் உயிரிழப்பு: விசாரணை நடத்த மாா்க்சிஸ்ட் வலியுற...
கொடைக்கானலில் இன்று மின்தடை
கொடைக்கானலில் செவ்வாய்க்கிழமை (செப். 16) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து மின் பகிா்மான செயற்பொறியாளா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கொடைக்கானல் துணை மின் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகின்றன.
எனவே கொடைக்கானல், பூம்பாறை, மன்னவனூா், கவுஞ்சி, பூண்டி, கிளாவரை, கூக்கால், பழம்புத்தூா், குண்டுபட்டி, கோம்பைக்காடு, வில்பட்டி, பெருமாள்மலை, பி.எல். செட், ஊத்து, பண்ணைக் காடு, தாண்டிக்குடி, மங்களம் கொம்பு, குப்பம்மாள்பட்டி, கே.சி. பட்டி, பெரியூா், பாச்சலூா், கடைசிக்காடு இவற்றை சுற்றியுள்ள பகுதிகளில் அன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்றாா் அவா்.