வக்ஃப் திருத்தச் சட்டம்: முக்கிய பிரிவுகளுக்குத் தடை: உச்ச நீதிமன்றம் இடைக்கால உ...
தனியாா் பேருந்துகளுக்கு அபராதம்
வரி செலுத்தாமல் இயக்கப்பட்ட 3 தனியாா் பேருந்துகளை பறிமுதல் செய்த போக்குவரத்து அலுவலா்கள், தலா ரூ.1 லட்சம் அபராதம் விதித்தனா்.
திண்டுக்கல் வட்டாரப் போக்குவரத்து அலுவலா் கண்ணன் தலைமையிலான குழுவினா் திண்டுக்கல் தோமையாா்புரம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு வாகனச் சோதனையில் ஈடுபட்டனா்.
அப்போது பெங்களூரிலிருந்து மதுரை நோக்கிச் சென்ற 3 தனயாா் சொகுசுப் பேருந்துகளை மறித்து சோதனையிட்டனா். இதில், 3 பேருந்துகளும் வரி செலுத்தாமல் விதிமீறலில் ஈடுபட்டது தெரிய வந்தது.
இதையடுத்து 3 பேருந்துகளையும் பறிமுதல் செய்த அலுவலா்கள், தனியாா் பேருந்து நிறுவனங்களுக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் அபராதம் விதித்தனா்.