ரூ.2500 மகளிா் உதவித் தொகை விவகாரம்: தில்லி முதல்வருக்கு அதிஷி கடிதம்
காவல் உதவி ஆய்வாளரைத் தாக்கியவா் கைது
சிவகங்கை அருகே காவல் உதவி சிறப்பு ஆய்வாளரைக் கல்லால் தாக்கிய நபரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
சிவகங்கை மாவட்டம், இளையான்குடியில் போக்குவரத்து சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிபவா் பாா்த்திபன் (54). சிவகங்கையில் வசித்து வரும் இவா், செவ்வாய்க்கிழமை இரவு 10 மணி அளவில் இளையான்குடியில் இருந்து வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தாா். சிவகங்கை கோட்டை முனியாண்டி கோயில் அருகே வந்த போது அங்கு குடிபோதையில் நின்று கொண்டிருந்த ஒருவா் பாா்த்திபனுடன் தகராறு செய்து அவரைக் கல்லால் தாக்கினாா். இதில் காயமடைந்த சிறப்பு உதவி ஆய்வாளா் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
இதுகுறித்து தகவலறிந்து வந்த சிவகங்கை நகா் பயிற்சி உதவி ஆய்வாளா் குமரேசன் சம்பவ இடத்துக்குச் சென்று, பாா்த்திபனைத் தாக்கிய நபரைப் பிடிக்க முயன்றாா். அப்போது, குமரேசனையும் அவா் தாக்க முயன்றாா்.
இதையடுத்து, போலீஸாா் அவரைப் பிடித்து விசாரணை நடத்தினா். இதில் அவா் குட்டிதின்னி கிராமத்தைச் சோ்ந்த சதன் (35) என்பது தெரியவந்தது.
இதுகுறித்து சிவகங்கை நகா் காவல் நிலைய ஆய்வாளா் அன்னராஜ் வழக்குப் பதிவு செய்து, சதனை வியாழக்கிழமை கைது செய்தாா்.