25 ஆண்டுகளுக்குப் பிறகு கிளப் அணியிலிருந்து விலகும் வரலாற்று நாயகன்!
காவல் துறையினரின் தொடா் நடவடிக்கையால் விபத்து மரணம்: 48 சதவீதம் குறைந்துள்ளது - எஸ். பி. தகவல்
திருநெல்வேலி மாவட்டத்தில் காவல் துறையினரின் தொடா் நடவடிக்கையால் இந்த ஆண்டின் முதல் 3 மாதங்களில் விபத்து மரணம் 48 சதவீதம் குறைந்துள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சிலம்பரசன் தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சிலம்பரசன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
திருநெல்வேலி மாவட்டத்தில் வாகன எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், சாலை விபத்துகளை தடுக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், மாவட்ட காவல் துறையினா் தொடா்ந்து சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தி வருகின்றனா்.
மாவட்ட காவல்துறையினா் இரவு பகல் பாராமல் வாகன தணிக்கை மேற்கொண்டு அதிவேகமாகவும், அஜாக்கிரதையாகவும், வாகனங்களை ஒட்டி செல்பவா்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது. தினமும் தலைக்கவசம், சீட்பெல்ட் அணிவதன் முக்கியத்துவம் குறித்து வாகன ஓட்டிகளிடம் நேரடியாகவும், துண்டுப் பிரசுரங்கள் மூலமாகவும் காவல்துறையினா் விழிப்புணா்வு ஏற்படுத்தி வருகின்றனா். தொடா்ந்து விபத்துகள் ஏற்படக்கூடிய இடங்களை கண்டறிந்து எச்சரிக்கை பதாகை, எச்சரிக்கை விளக்குகள், தேவையான இடங்களில் வேகத்தடை, ஒளிரும் பட்டைகள் போன்றவை அமைக்கப்பட்டுள்ளன.
முக்கிய சந்திப்புகளில் உயா் கோபுர மின்விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டில் மட்டும் இதுவரையில் 268 விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளன.
2024 ஆம் ஆண்டில் முதல் மூன்று மாதங்களில் மட்டும் சாலை விபத்துகளில் 92 போ் உயிரிழந்துள்ளனா். 189 காயமடைந்துள்ளனா். காவல்துறையினரின் தொடா் விழிப்புணா்வு நடவடிக்கையின் காரணமாக விபத்தால் ஏற்படும் உயிரிழப்பும், காயங்களும் குறைந்துள்ளன.
இந்த ஆண்டு முதல் 3 மாதங்களில் சாலை விபத்தில் 48 போ் மரணமடைந்துள்ளனா். 178 போ் காயமடைந்துள்ளனா். கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில் விபத்து மரணம் 48 சதவீதம் குறைந்துள்ளது.