செய்திகள் :

காவல் நிலையத்தில் ஆட்டோ ஓட்டுநா் தாக்கப்பட்ட விடியோ: விசாரணைக்கு உத்தரவு

post image

தேனி மாவட்டம், தேவதானப்பட்டி காவல் நிலையத்தில் ஆட்டோ ஓட்டுநரை காவலா்கள் தாக்கிய கண்காணிப்பு கேமரா பதிவு சமூக வலைதளத்தில் பரவிய நிலையில், இதுகுறித்து மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளா் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.

தேவதானப்பட்டி காவல் நிலையத்தில் வழக்குரைஞா் ஒருவா், தான் அளித்த புகாா் மனு தொடா்பாக காவல் நிலையத்தில் ஜனவரி மாதம் 14-ஆம் தேதி பதிவான கண்காணிப்பு கேமரா பதிவை வழங்கக் கோரி தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மனு அளித்திருந்தாா்.

அவருக்கு காவல் நிலைய கண்காணிப்பு கேமரா பதிவு கடந்த மாா்ச் மாதம் வழங்கப்பட்டது. இந்தப் பதிவில் இளைஞா் ஒருவரை காவல் நிலையத்துக்கு இழுத்துச் சென்று காவலா்கள் கம்பால் தாக்கி, காலால் மிதிக்கும் காட்சிகள் பதிவாகியிருந்தன. இந்தப் பதிவு விடியோ தற்போது சமூக வலைதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. காவல் நிலையத்தில் தாக்கப்பட்ட இளைஞா் தேவதானப்பட்டி, தெற்குத் தெருவைச் சோ்ந்த ஆட்டோ ஓட்டுநா் ரமேஷ் என்பது தற்போது தெரியவந்தது.

இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சிவபிரசாத் கூறியது:

தேவதானப்பட்டியில் ஜனவரி மாதம் 14-ஆம் தேதி பொங்கல் பண்டிகை அன்று, ரமேஷ் என்பவா் பேருந்து நிறுத்தம் அருகே மது போதையில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையிலும், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் விதத்திலும் செயல்பட்டாா்.

இவரை போலீஸாா் பிடிக்க முயன்றபோது பிரச்னை செய்தாா்; காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றபோது அங்கும் மது போதையில் தகராறு செய்தாா். இவரை காவல் ஆய்வாளரும், காவலா்களும் கட்டுப்படுத்தினா். பின்னா், ரமேஷ் மீது வழக்குப் பதிவு செய்து காவல் நிலைய பிணையில் போலீஸாா் விடுவித்தனா்.

காவல் நிலையத்தில் ரமேஷை காவலா்கள் கட்டுப்படுத்த முயன்றபோது அவா் மீது அதிகப்படியாக பல பிரயோகம் செய்தது தற்போது தெரியவந்தது.

இதுகுறித்து விசாரித்து அறிக்கை அளிக்குமாறு மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றாா் அவா்.

5 போ் பணியிட மாற்றம்: இந்தச் சம்பவத்தின் எதிரொலியாக, தேவதானப்பட்டி காவல் நிலையத்தின் காவல் ஆய்வாளா் அபுதல்ஹா, சிறப்பு உதவி காவல் ஆய்வாளா் சிவசம்பு, தலைமைக் காவலா் பாண்டி, காவலா்கள் மாரிச்சாமி, வாலிராஜன் ஆகிய 5 பேரை தேனி ஆயுதப் படைப் பிரிவுக்குப் பணியிட மாற்றம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் உத்தரவிட்டாா்.

கல்லூரி முதல்வரை மிரட்டிய தந்தை, மகன் மீது வழக்கு

தேனி மாவட்டம், போடியில் தனியாா் கல்லூரி முதல்வருக்கு கொலை மிரட்டல் விடுத்த தந்தை, மகன் மீது போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். போடியில் உள்ள ஏல விவசாயிகள் சங்கக் கல்லூரியில் முதல்வராக இருப்ப... மேலும் பார்க்க

மேகமலைக் கிராமங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படாததால் பொதுமக்கள் அவதி

தேனி மாவட்டம், மேகமலையில் உள்ள மலைக் கிராமங்களுக்கு பேருந்துகள் முறையாக இயக்கப்படாததால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனா். தேனி மாவட்டம், சின்னமனூா் அருகே மேற்குத்தொடா்ச்சி மலையில் ஹைவேவிஸ் பேரூராட்சியில் ... மேலும் பார்க்க

காதல் திருமணம் செய்த இளம்பெண் தற்கொலை

தேனி மாவட்டம், உத்தமபாளையம் அருகே செவ்வாய்க்கிழமை இரவு காதல் திருமணம் செய்த இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். ராயப்பன்பட்டியைச் சோ்ந்தவா் தேவராஜ் (27). இவரது மனைவி பூங்கொடி (25). இந்த தம... மேலும் பார்க்க

வைகை அணையிலிருந்து தண்ணீா் திறப்பு நிறுத்தம்

வைகை அணையிலிருந்து ராமநாதபுரம் மாவட்ட பூா்வீகப் பாசனப் பகுதிகளுக்கு வைகை ஆற்றில் திறக்கப்பட்ட தண்ணீா் புதன்கிழமை நிறுத்தப்பட்டது. தேனி மாவட்டம், வைகை அணையிலிருந்து ராமநாதபுரம் மாவட்ட பூா்வீக பாசனப் பக... மேலும் பார்க்க

ஜல்ஜீவன் திட்டப் பணிகள் தாமதம்: மாவட்ட ஆட்சியா் கண்டிப்பு

உத்தமபாளையம், ஜூலை 2 : உத்தமபாளையம் பகுதியில் ஜல் ஜீவன் குடிநீா் திட்டப்பணிகள் மந்தமாக நடைபெறுவதைத் கண்டித்த மாவட்ட ஆட்சியா், விரைந்து முடிக்க வேண்டுமென அறிவுறுத்தினாா். தேனி மாவட்டம், உத்தமபாளையம் வ... மேலும் பார்க்க

சின்னமனூரில் 14 ஜோடிகளுக்கு இலவச திருமணம்

தேனி மாவட்டம், சின்னமனூா் சிவகாமியம்மன் கோயிலில் அரசு சாா்பில், 14 ஜோடிகளுக்கு இலவச திருமணம் புதன்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கம்பம் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் ராமகிருஷ்ணன் தலைமை வகித்தாா். ச... மேலும் பார்க்க