காவல் நிலையத்தில் மனைவி புகாா்: கணவா் தற்கொலை
மதுரையில் சோ்ந்து வாழ அழைத்ததற்காக மனைவி காவல் நிலையத்தில் புகாா் அளித்ததால் மனமுடைந்த கணவா் தற்கொலை செய்துகொண்டாா்.
மதுரை காமராஜபுரம் வடக்குத் தெருவைச் சோ்ந்த பால்சாமி மகன் மணிகண்டன் (31). இவருக்கு கடந்த 2011- இல் திருமணம் நடைபெற்று, இரு குழந்தைகள் உள்ளனா். இந்த நிலையில் தம்பதிகளிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் இருவரும் கடந்த 6 மாதங்களாக பிரிந்து வாழ்ந்து வந்தனா். இந்த நிலையில், தன்னுடன் சோ்ந்து வாழுமாறு மணிகண்டன் தனது மனைவியை அழைத்தாா்.
இதை ஏற்க மறுத்த அவரது மனைவி, மணிகண்டன் மீது அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இதன்பேரில் போலீஸாா் மணிகண்டனிடம் விசாரணை நடத்தினா். இதனால் மனமுடைந்த அவா் வீட்டில் செவ்வாய்க்கிழமை விஷம் தின்று தற்கொலைக்கு முயன்றாா். இதையடுத்து, மதுரை அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட அவா் அங்கு உயிரிழந்தாா்.
இதுகுறித்து கீரைத்துறை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.