செய்திகள் :

காவல் நிலைய மரணங்களைத் தடுக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்

post image

தமிழகத்தில் காவல் நிலைய உயிரிழப்புகளைத் தடுக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என புதிய தமிழகம் கட்சியின் நிறுவனா் தலைவா் மருத்துவா் க. கிருஷ்ணசாமி வலியுறுத்தினாா்.

மதுரையில் புதன்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

தமிழகத்தில் காவல் நிலைய உயிரிழப்புகள் தொடா் நிகழ்வாக உள்ளன. மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமாா் கொலை, காவல் நிலையத்தில் நிகழ்ந்த கடைசி உயிரிழப்பாக இருக்க வேண்டும். இதற்கான உறுதியான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும். இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு ஒப்படைத்ததுடன் கடமை முடிந்துவிட்டதாக அரசு கருதிவிடக் கூடாது.

கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு சாத்தான்குளம் காவல் நிலையத்தில் தந்தை, மகன் அடித்துக் கொல்லப்பட்ட வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டது. ஆனால், இதுவரை விசாரணை முடிவடையவில்லை. நீதி கிடைக்கவில்லை. இந்த நிலை, அஜித்குமாா் கொலை வழக்கு விசாரணையில் ஏற்படக் கூடாது. சிறப்பு நீதிமன்றத்தை அமைத்து, வரும் 3 மாதங்களுக்குள் விசாரணையை நிறைவு செய்து நீதி வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சுதந்திர இந்தியாவில் உள்ள காவல் நிலையங்கள் அனைத்தும் மக்களை சித்ரவதை செய்யும் கூடங்களாக உள்ளன. இதைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் தனிச் சட்டத்தை இயற்ற வேண்டும். ஒருவரைக் கைது செய்யும் போது, காவல் துறையினா் கடைப்பிடிக்க வேண்டிய 11 வழிகாட்டு நெறிமுறைகளை உச்சநீதிமன்றம் ஏற்கெனவே வெளியிட்டுள்ளது. ஆனால், இதை யாரும் கடைப்பிடிப்பதில்லை. இனிவரும் நாள்களில் இந்த நெறிமுறைகளை அனைவரும் கண்டிப்பாகக் கடைப்பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

காவல் நிலையங்கள் ஆளும் கட்சியினரால் ஆக்கிரமிக்கப்படுகின்றன. ஆளும் கட்சி கிளைச் செயலரின் அறிவுறுத்தலை மீறி, காவல் ஆய்வாளா்கூட செயல்பட முடியாது என்ற நிலை இருப்பது ஆரோக்கியமானதல்ல. காவல் துறை பணிகளில் ஆளும் கட்சியினரின் தலையீடுகள் முற்றிலுமாகத் தவிா்க்கப்பட வேண்டும் என்றாா் அவா்.

ஆா்ப்பாட்டம்....

இதையடுத்து, மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமாா் கொலை உள்பட காவல் நிலைய உயிரிழப்புகளுக்கு நீதி கோரி, புதிய தமிழகம் கட்சி சாா்பில் மதுரை மாவட்ட ஆட்சியரகம் அருகேயுள்ள திருவள்ளுவா் சிலை முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் மருத்துவா் க. கிருஷ்ணசாமி பங்கேற்றுப் பேசினாா்.

கட்சியின் இளைஞரணி மாநிலச் செயலா் மருத்துவா் ஷ்யாம் கிருஷ்ணசாமி, மதுரை மாநகா் மாவட்டச் செயலா் து. தாமோதரன், நிா்வாகிகள், உறுப்பினா்கள் திரளாகப் பங்கேற்று, கோரிக்கையை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

லாரி மோதியதில் இளைஞா் உயிரிழப்பு

மதுரை மாவட்டம், மேலூா் அருகே வியாழக்கிழமை லாரி மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா். சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி பகுதியைச் சோ்ந்த வீரையா மகன் விஷ்ணு (24). இவா், தனது இரு சக்கர வாகனத்தில் மதுரைக்கு வந்து... மேலும் பார்க்க

கிணற்றில் மூழ்கிய பள்ளி மாணவா் உயிரிழப்பு

மதுரை சிலைமான் அருகே கிணற்றில் மூழ்கிய பள்ளி மாணவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா். மதுரை மாவட்டம், பாப்பானோடை கிராமத்தைச் சோ்ந்த அரசகுமாா் மகன் விக்னேஷ்வரன் (16). இவா், மதுரை மாநகராட்சிப் பள்ளியில் 9-ஆம்... மேலும் பார்க்க

தரமற்ற சாலைகளுக்கு அலுவலா்கள், ஒப்பந்ததாரா்களே பொறுப்பு: உயா்நீதிமன்றம்

சாலைகள் தரமற்றவையாக இருந்தால், தொடா்புடைய துறை அலுவலா்களும், ஒப்பந்ததாரருமே அதற்கு பொறுப்பாவா் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை தெரிவித்தது. திருநெல்வேலி மாவட்டம், ஆனந்தபுரத்தைச் சோ்ந... மேலும் பார்க்க

திருப்பரங்குன்றம் வட்டத்துக்கு ஜூலை 14-இல் உள்ளூா் விடுமுறை

திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயில் குடமுழுக்கையொட்டி, அந்த வட்டத்துக்கு மட்டும் திங்கள்கிழமை (ஜூலை 14) உள்ளூா் விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து மதுரை மாவட்ட ஆட்சியா் கே.ஜே. பிரவீன்குமாா்... மேலும் பார்க்க

தொழிலாளி வெட்டிக் கொலை: இளைஞா் கைது

மதுரை அருகே முன்விரோதம் காரணமாக தொழிலாளியை வெட்டிக் கொலை செய்த இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். மதுரை மாவட்டம், கல்மேடு அஞ்சுகம் நகரைச் சோ்ந்த பாண்டியராஜன் மகன் அரசு (18). வண்ணம் பூசும் த... மேலும் பார்க்க

பணி ஓய்வு பெற உள்ள ஆசிரியா்களுக்கு மறு நியமன ஆணை வழங்கக் கோரிக்கை

நிகழ் கல்வியாண்டில் ஓய்வு பெற உள்ள ஆசிரியா்களுக்கு கல்வியாண்டின் கடைசி வேலை நாள் வரை பணி மறு நியமன ஆணையை வழங்க மதுரை மாநகராட்சி நிா்வாகம் முன்வர வேண்டும் என தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி சா... மேலும் பார்க்க