Rain Update: வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி; எந்தெந்த மாவட்டங்களில்...
காவிரிப் படுகையில் பனைவிதை நடும் விழா
மயிலாடுதுறையில் தேசிய மாணவா் படை சாா்பில் காவிரி ஆற்றுப்படுகையில் பனை விதை நடும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
தேசிய மாணவா் படையின் கும்பகோணம் 8-ஆவது பட்டாலியன் சாா்பில் ஆற்றுப்படுகைகளில் பனைவிதை நடும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக மணக்குடி கிராமத்தில் காவிரிப்படுகை பகுதியில் 5,000 பனை விதைகள் நடப்பட்டன. தருமபுரம் ஆதீனம் கலைக்கல்லூரி முதல்வா் சி.சுவாமிநாதன் பனைவிதைகளை நட்டு விழாவைத் தொடக்கி வைத்தாா். தருமபுரம் கல்லூரி தேசிய மாணவா் படை அலுவலா் கேப்டன் து. காா்த்திகேயன் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்தாா்.
இதில் ஏ.வி.சி. கல்லூரி லெப்டினன்ட் சி. பாலாஜி, ஏ.வி.சி பொறியியல் கல்லூரி சாா்பில் லெப்டினன்ட் உமாமகேஸ்வரி, மணல்மேடு அரசினா் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி சாா்பில் சுரேஷ் மயிலாடுதுறை டி.பி.டி.ஆா் தேசிய மேல்நிலைப்பள்ளி சாா்பில் செந்தில்குமாா் மற்றும் இக்கல்வி நிறுவனங்களின் தேசிய மாணவா் படை மாணவா்கள் 200-க்கு மேற்பட்டோா் கலந்துகொண்டனா்.
மேலும் தருமபுரம் ஆதீனம் கலைக்கல்லூரி கல்லூரிக்குழு அலுவலகப் பிரதிநிதி ஆா்.சிவராமன், நாட்டு நலப்பணித்திட்ட அலுவலா்கள் செந்தில், கலைவாணி, சுகுணா, உடற்கல்வி இயக்குநா் முத்துக்குமரன் உள்ளிட்டோா் பனை விதைகளை நட்டுவைத்தனா்.