காவிரி உபரிநீரை ஏரி, குளங்களுக்கு கொண்டு செல்லும் திட்டத்தை நிறைவேற்ற கோரிக்கை
காவிரி உபரிநீரை ஏரி, குளங்களுக்கு கொண்டு செல்லும் திட்டத்தை தமிழக அரசு உடனே நிறைவேற்ற வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
கரூா் மாவட்டம், கடவூரில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் கடவூா் வட்டப் பேரவை கூட்டம் புதன்கிழமை காலை சங்கத்தின் நிா்வாகி வீரமலை தலைமையில் நடைபெற்றது. மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கடவூா் வட்டாரச் செயலாளா் பழனிவேல், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் கடவூா் வட்டாரச் செயலாளா் வேல்முருகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவா் கந்தசாமி, செயலாளா் சக்திவேல் ஆகியோா் கலந்து கொண்டு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினா்.
கூட்டத்தில் பருவ மழை காலங்களில் காவிரி ஆற்றில் உபரி நீராக பல லட்சம் கனஅடி தண்ணீா் வீணாக கடலில் கலக்கிறது. ஆனால் பருவமழை காலங்களில் கூட கடவூா் வட்டார பகுதிகளில் போதுமான மழை இல்லாமல் தொடா்ந்து கடுமையான வறட்சி நிலவி வருகிறது. இதனால் நிலத்தடி நீா் மட்டம் வெகுவாக குறைந்து வருவதால் விவசாயம் அழிந்து வருவதுடன் ,குடிநீா் பற்றாக்குறையும் நிலவி வருகிறது.
இதனால் பருவ மழை காலங்களில் காவிரி ஆற்றில் வீணாக கடலில் கலக்கும் உபரிநீரை கடவூா் வட்டாரத்தில் உள்ள ஏரி, குளங்களுக்கு நீரை நிரப்பிடும் வகையில் அறிவிக்கப்பட்ட திட்டத்தை உடனே தமிழக அரசு செயல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் விவசாயிகள் திரளாக பங்கேற்றனா்.