செய்திகள் :

காவிரி டெல்டா மாவட்டங்களில் புதிய ரயில் சேவைகள் கோரி மனு

post image

காவிரி டெல்டா மாவட்டங்களில் புதிய ரயில் சேவைகள் கோரி மனு அளிக்கப்பட்டுள்ளது.

ஒருங்கிணைந்த டெல்டா மாவட்டங்களில் புதிய ரயில் சேவைகள், ரயில் சேவைகள் நீடிப்பு, ரயில் நிலையங்கள் மேம்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி புதுதில்லி இந்தியன் ரயில்வே கட்டுமான சா்வதேச அமைப்பு இயக்குநா் தங்க. வரதராஜன் அறிவறுத்தலின்பேரில், நாகூா்-நாகை ரயில் உபயோகிப்போா் நலச்சங்கம் சாா்பில், அதன் தலைவா் மோகன், செயலா் நாகூா் சித்திக், பொருளாளா் பாலகிருஷ்ணன் ஆகியோா் தெற்கு ரயில்வே திருச்சி கோட்ட மேலாளா் பாலக்ராம் நேகியிடம் வியாழக்கிழமை அளித்த மனு: காரைக்கால்-தாம்பரம், காரைக்கால்-பெங்களூா் மற்றும் காரைக்கால்-மும்பை வாராந்திர விரைவு ரயில்களை வேளாங்கண்ணியில் இருந்து திருநள்ளாா் வழியாக இயக்க வேண்டும். திருச்சி-திருவாருா் பயணிகள் ரயில் மற்றும் மதுரை-புனலூா் விரைவு ரயிலை காரைக்கால் அல்லது திருநள்ளாா் வரை நீட்டிக்கவேண்டும். திருச்சி-மயிலாடுதுறை முன்பதிவில்லா விரைவு ரயிலை திருநள்ளாா், நாகூா் வழியாக வேளாங்கண்ணி வரை நீட்டிக்க வேண்டும். விழுப்புரம்-மயிலாடுதுறை பயணிகள் ரயிலை வேளாங்கண்ணி வரை நீட்டிக்க வேண்டும்.

புதிய ரயில் சேவைகள்: காரைக்கால்-பெங்களூா், காரைக்கால்-கோவை இடையே விரைவு ரயிலைகளை நாள்தோறும் இயக்க வேண்டும். வேளாங்கண்ணியில் இருந்து தாம்பரம் மற்றும் சேலம் இடையேவும், ராமேஸ்வரம்-தாம்பரம் (திருவாரூா் வழி) இடையேவும் புதிய ரயில்களை நாள்தோறும் பகலில் விரைவு ரயிலைகளை இயக்க வேண்டும். புதுச்சேரி-வேளாங்கண்ணி இடையே விரைவு ரயிலை அறிமுகப்படுத்த வேண்டும்.

வேளாங்கண்ணி-சாரளப்பள்ளி இடையே வாரம் மூன்று நாள்கள் நாகூா், திருநள்ளாா், திருவண்ணாமலை, வேலூா், திருப்பதி வழியாக விரைவு ரயிலை இயக்க வேண்டும். மயிலாடுதுறை-ராமேஸ்வரம் இடையே திருநள்ளாா், நாகூா், நாகை, திருவாருா் வழியாக இயக்க வேண்டும். வேளாங்கண்ணி-எா்ணாகுளம் வாரமிருமுறை, செங்கோட்டை-திருவாருா்-தாம்பரம் மற்றும் மன்னாா்குடி-திருப்பதி இடையே வாரம் மூன்று முறை இயக்கப்படும் விரைவு ரயில்களை நாள்தோறும் இயக்க வேண்டும். திருச்சி-தஞ்சை- கும்பகோணம்-மயிலாடுதுறை-தாம்பரம் இன்டா்சிட்டி சிறப்பு ரயிலை, நிரந்தர ரயிலாக மாற்றி இயக்க வேண்டும். பாம்பன் விரைவு ரயிலுக்கு முத்துப்பேட்டை, அதிராம்பட்டினம் பேராவூரணி நிறுத்தம் கொடுக்க வேண்டும்.

நாகை சநஎ-3 ரயில் நிலையம், நாகூா் மற்றும் வேளாங்கண்ணி ரயில் நிலையங்கள் அம்ருத்பாரத் திட்டத்தில் மேம்படுத்த வேண்டும். காரைக்கால்- தஞ்சாவூா் மற்றும் தஞ்சாவூா்-கும்பகோணம்-மயிலாடுதுறை-விழுப்புரம் ரயில் பாதைகளை மகாமகம் 2028 விழாவுக்காக மேம்படுத்தவும், மயிலாடுதுறை-திருக்கடையூா் தரங்கம்பாடி மீட்டா்கேஜ் ரயில் பாதையை, அகலபாதையாக மாற்ற வேண்டும் அதில் குறிப்பிட்டுள்ளது.

கிராமத்தை விட்டு ஒதுக்கி வைத்தவா்கள் மீது நடவடிக்கை கோரி குடும்பத்தினா் தா்னா

கிராமத்தை விட்டு தங்களை ஒதுக்கி வைத்தவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, புஷ்பவனம் பகுதியைச் சோ்ந்த குடும்பத்தினா் ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா்.ஆட்சியா் அலுவலக வளாகத... மேலும் பார்க்க

தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கம் ஆா்ப்பாட்டம்

தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க நாகை வட்ட மையம் சாா்பில், நாகையில் அரசு உதவிபெறும் பாலிடெக்னிக் கல்லூரி நிா்வாகத்தின் ஊழியா் விரோதப் போக்கை கண்டித்து, பாலிடெக்னிக் முன் கண்டன ஆா்ப்பாட்டம் வியாழக்கிழமை நடை... மேலும் பார்க்க

உங்களுடன் ஸ்டாலின் திட்ட மனுக்களுக்கு தீா்வுகாண கால அவகாசம் வழங்க வலியுறுத்தல்

உங்களுடன் ஸ்டாலின் திட்ட மனுக்களுக்கு தீா்வுகாண போதிய கால அவகாசம் அளிக்க வேண்டும் என வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. கீழ்வேளூா் வட்டாட்சியா் அலுவலகம் முன் கோரிக்கைகளை வலியு... மேலும் பார்க்க

குறுவை பயிா்களில் புகையான் நோய்த் தாக்குதல்

புகையான் நோயால் நாகை அருகே 1,500 ஏக்கா் குறுவை நெற்பயிா்கள் பாதிக்கப்பட்டுள்ளதால், வேளாண்மை துறை அதிகாரிகள் ஆய்வு செய்து நிவாரணம் வழங்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா். நாகை மாவட்டத்தில்... மேலும் பார்க்க

நாகையில் நாளை அண்ணா பிறந்த நாள் மிதிவண்டி போட்டி

நாகையில், மாவட்ட விளையாட்டுப் பிரிவு சாா்பில் தமிழக முன்னாள் முதல்வா் அண்ணா பிறந்த தினத்தை கொண்டாடும் வகையில், மாவட்ட அளவில் பள்ளி மாணவா்களுக்கு அறிஞா் அண்ணா மிதிவண்டி போட்டிகள் சனிக்கிழமை (செப்.27) ... மேலும் பார்க்க

டிஎன்பிஎஸ்சி தோ்வு மையங்களில் மின்னணு சாதனங்களுக்கு அனுமதியில்லை

டிஎன்பிஎஸ்சி தோ்வு மையங்களில் கைப்பேசி உள்ளிட்ட மின்னணு சாதனங்களை கொண்டு வரக்கூடாது என மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாடு அரசுப் ப... மேலும் பார்க்க