செய்திகள் :

காஷ்மீா் இளைஞா்களை கெடுக்கும் மத அடிப்படைவாதிகளுக்கு முற்றுப்புள்ளி: துணைநிலை ஆளுநா் மனோஜ் சின்ஹா

post image

ஜம்மு-காஷ்மீரில் இளைஞா்களை தவறான பாதைக்கு இழுக்க முயற்சிக்கும் மதஅடிப்படைவாதிகளுக்கு மத்திய அரசு விரைவில் முற்றுப்புள்ளி வைக்கும் என்று துணைநிலை ஆளுநா் மனோஜ் சின்ஹா தெரிவித்தாா்.

ஸ்ரீநகரில் ஞாயிற்றுக்கிழமை மாநில காவல் துறை சாா்பில் நடைபெற்ற மிதிவண்டி போட்டிகளை துணைநிலை ஆளுநா் மனோஜ் சின்ஹா தொடங்கி வைத்தாா். இந்த நிகழ்ச்சியில் அவா் பேசியதாவது:

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதத்துக்கு எதிராக நடைபெற்று வரும் போரில் பொதுமக்கள் அனைவரும் கைகோத்து செயல்பட வேண்டும். ஜம்மு-காஷ்மீரில் இளைஞா்களை தவறான பாதைக்கு இழுக்கும் மதஅடிப்படைவாதிகளுக்கு மத்திய அரசு விரைவில் முற்றுப்புள்ளி வைக்கும். இணையவழி பயங்கரவாத பிரசாரம், ஆயுதங்களைக் கடத்துவது, நிதி திரட்டுவது, பயங்கரவாதிகளுக்காக போதைப்பொருள் என அனைத்தும் உறுதியான நடவடிக்கைகள் மூலம் தடுக்கப்பட்டு வருகிறது.

இளைஞா்கள் வன்முறை, போதைப்பொருள் உள்ளிட்ட தவறான பாதைக்குச் சென்று சிக்கிவிடாமல், தேச வளா்ச்சி குறித்த சிந்தனைகளை வளா்த்துக் கொள்ள வேண்டும். ஜம்மு-காஷ்மீரை பயங்கரவாதத்தில் இருந்தும், போதைப்பொருள் பயன்பாட்டில் இருந்தும் மீட்பது இளைஞா்களின் கைகளில்தான் உள்ளது.

இங்கு காவல்துறையினா் தன்னமலமற்ற வகையில் பணியாற்றி வருகின்றனா். கடந்த 5 ஆண்டுகளுக்கு மேல் மாநிலத்தில் அமைதியை நிலைநாட்டியதில் காவல் துறையினா் பங்கு மிகவும் முக்கியமானது. அமைதியான சூழல் வெறு இடத்தில் இருந்து வாங்கும் பொருள் அல்ல. அது நாமே உருவாக்குவதாகும்.

முன்பு ஜம்மு-காஷ்மீரில் முழு அடைப்பு, போராட்டங்கள், வன்முறை, கல்வீச்சு உள்ளிட்டவை தொடா் நிகழ்வாக இருந்து வந்தன. ஆனால், இப்போது கற்கள் வீசிய கைகளில் பேனாக்கள் இடம் பெற்றுள்ளன. இளைஞா்கள் புத்தாக்க நிறுவனங்களை உருவாக்குவது குறித்து சிந்திக்கத் தொடங்கிவிட்டனா். ஆய்வு மற்றும் புதிய கண்டுபிடிப்புகளை ஜம்மு-காஷ்மீா் இளைஞா்களிடம் இருந்தும் வரத் தொடங்கிவிட்டன. மக்கள் எவ்வித அச்சமும் நெருக்கடியும் இன்றி தங்கள் வாழ்க்கையை வாழத் தொடங்கிவிட்டனா் என்றாா்.

கேரள முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன் காலமானார்!

கேரள முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன் (வயது 101) வயது மூப்பு காரணமாக திங்கள்கிழமை காலமானார்.மாரடைப்பு மற்றும் வயது தொடர்பான உடல்நலக் குறைவு காரணமாக அச்சுதானந்தன் கடந்த ஜூன் 23 ஆம் தேதி திருவனந்தபுரத்தி... மேலும் பார்க்க

மும்பை ரயில் குண்டுவெடிப்பு.. 19 ஆண்டுகளுக்குப் பின் 12 பேர் விடுதலை செய்யப்பட்டது ஏன்?

2006ஆம் ஆண்டு மும்பையில் நடத்தப்பட்ட குண்டுவெடிப்புச் சம்பவத்தில் குற்றஞ்சாட்டப்பட்ட 12 பேரையும் மும்பை உயர் நீதிமன்றம் இன்று விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது.மும்பையில் புறநகர் ரயில்களில் அடுத்தடுத்து... மேலும் பார்க்க

குஜராத்தில் ஒரே குடும்பத்தில் 5 பேர் தற்கொலை! அதிர்ச்சி தரும் காரணம்

குஜராத் மாநிலத்தில், மூன்று குழந்தைகளைக் கொன்றுவிட்டு, தம்பதி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில், நிதிநிலைமைதான் இதற்குக் காரணம் என்று முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்... மேலும் பார்க்க

பாம்பை வெறும் கைகளால் பிடித்த பாலிவுட் நடிகர் சோனு சூட் !

பாலிவுட் நடிகர் சோனு சூட் தனது வீட்டு வளாகத்திற்குள் நுழைந்த பாம்பை வெறும் கைகளால் பிடித்தார். பாலிவுட் நடிகர் சோனு சூட் சனிக்கிழமை தனது இன்ஸ்டா பக்கத்தில் விடியோ ஒன்றை பதிவேற்றியுள்ளார். அதில் அவர் த... மேலும் பார்க்க

மும்பையில் தரையிறங்கிய ஏர் இந்தியா விமானத்தின் 3 டயர்கள் வெடித்தது!

மும்பையில் தரையிறங்கிய ஏர் இந்தியா விமானத்தின் மூன்று டயர்கள் வெடித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.கேரள மாநிலம் கொச்சியில் இருந்து ஏர் இந்தியாவின் ஏஐ2744 விமானம் இன்று காலை மும்பை சத்திரபதி சிவாஜி சர்வத... மேலும் பார்க்க

உ.பி.யில் அம்பேத்கர் சிலையை கால்வாயில் வீசிய மர்மநபர்களால் பரபரப்பு !

உ.பி.யில் அம்பேத்கர் சிலையை பெயர்த்து கால்வாயில் வீசிய மர்மநபர்களால் பரபரப்பு நிலவியது. உத்தரப் பிரதேச மாநிலம், கங்காநகரில் உள்ள கோடாபூர் கிராமத்தில் பி.ஆர். அம்பேத்கரின் சிலை நிறுவப்பட்டிருந்தது. இந்... மேலும் பார்க்க