செய்திகள் :

காஸா மீதான போருக்காக இஸ்ரேல் பிரதமரைக் கைது செய்ய ஆணை!

post image

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவைக் கைது செய்யும் ஆணையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.

இஸ்ரேல் - பாலஸ்தீன் இடையே கடந்த 13 மாதங்களாக போர் நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டு அக்டோபரில் தெற்கு இஸ்ரேல் பகுதியில் ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கிடையே போர் தொடங்கியது.

இதனைத் தொடர்ந்து, இரு நாடுகளும் தொடர்ந்து ஒருவர் மீது ஒருவர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். கடந்த அக்டோபர் மாதம், ஹமாஸ் அமைப்பினர் மீண்டும் ஒருங்கிணைந்து தாக்குதல் நடத்தத் திட்டமிடுவதாகக் கூறி இஸ்ரேல் வடக்கு காஸா பகுதியில் தொடர் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், காஸாவில் போர்க் குற்றங்களைத் தூண்டியதற்காக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, முன்னாள் பாதுகாப்புத் துறை அமைச்சர் கேல்ண்ட் இருவரையும் கைது செய்வதற்கான ஆணையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.

இஸ்ரேலும், அதன் முக்கிய நட்பு நாடான அமெரிக்காவும் சர்வதேச நீதிமன்றத்தில் உறுப்பினர்களாக இல்லாதது குறிப்பிடத்தக்கது. நீதிமன்றத்தின் இந்த ஆணையை, பிரதமர் நெதன்யாகுவும் மற்ற இஸ்ரேலிய தலைவர்களும் `அவமானகரமானது’ என்று குறிப்பிட்டுள்ளனர்.

இதையும் படிக்க:ரயில் நிலைய மேற்கூரை விழுந்து விபத்தான வழக்கில் அமைச்சர் உள்பட 11 பேர் கைது!

அதானி குழுமத்துடனான ஒப்பந்தங்கள் ரத்து! -கென்யா நடவடிக்கை

சூரிய ஒளி மின்சார விநியோக ஒப்பந்தங்களை பெறுவதற்காக ரூ. 2,100 கோடி லஞ்சமாக இந்திய அரசு அதிகாரிகளுக்கு அதானி கொடுத்ததாகவும், அதனை மறைத்து அமெரிக்காவிடம் முதலீடுகளை பெற்றதாகவும் நியூ யார்க் நீதிமன்றத்தில... மேலும் பார்க்க

நோயாளிகளுக்கு 12 ஆண்டுகளாக பாலியல் சித்ரவதை! மருத்துவருக்கு சிறை

குழந்தைகள் உள்பட 300-க்கும் மேற்பட்ட நோயாளிகளை மருத்துவர் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் நியூயார்க்கை சேர்ந்த மருத்துவர் டேரியஸ் பட... மேலும் பார்க்க

பாகிஸ்தான்: பயங்கரவாதத் தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உள்பட 38 பேர் பலி!

பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வாவில் பேருந்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 38 பேர் பலியாகினர்.பாகிஸ்தானின் வடகிழக்குப் பகுதியில் 10 பேர் கொண்ட பயங்கரவாதி கும்பல், வியாழக்கிழமை (நவ. 21) இருவேறு இடங்களி... மேலும் பார்க்க

சர்வதேச சூரியசக்தி கூட்டமைப்பில் அர்மேனியாவுக்கு அங்கீகாரம் -மத்திய வெளியுறவுத்துறை

இந்தியா, பிரான்ஸ் கூட்டு முயற்சியால் அமைக்கப்பட்ட சர்வதேச சூரியசக்தி கூட்டமைப்பில் அர்மேனியாவுக்கு முழுநேர உறுப்பினராக அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது.பருவநிலை மாற்றம் தொடர்பான சவால்களை எதிர்கொள்ளவும் ம... மேலும் பார்க்க

ஐஸ்லாந்தில் ஒரு வருடத்தில் 7-வது முறை வெடித்த எரிமலை!

தென்மேற்கு ஐஸ்லாந்தில் உள்ள ரெய்க்ஜேன்ஸ் தீபகற்ப பகுதியில் உள்ள எரிமலை ஏழாவது முறையாக நேற்றிரவு வெடித்துச் சிதறியுள்ளது. ஐஸ்லாந்தின் வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவலின்படி, எரிமலையானது நேற்று மாலை வெ... மேலும் பார்க்க

ரயில் நிலைய மேற்கூரை விழுந்த விபத்தில் 15 பேர் பலி!

செர்பியா ரயில் நிலைய மேற்கூரை விழுந்த விபத்து குறித்து தொடரப்பட்ட வழக்கில் அமைச்சர் உள்பட 11 பேர் கைது செய்யப்பட்டனர்.செர்பியாவில் வடக்கு நகரமான நோவி சாட்டில் நவ. 1 ஆம் தேதியில் ரயில் நிலைத்தில் இருந்... மேலும் பார்க்க