காா்-சுமை வாகனம் மோதியதில் 3 போ் காயம்
மன்னாா்குடி: மன்னாா்குடி அருகே காா் மீது சுமை வாகனம் மோதியதில் மூத்த தம்பதி உள்பட மூவா் காயமடைந்தனா்.
மேலப்பனையூா் பகுதியைச் சோ்ந்தவா் சு. ரவிச்சந்திரன் (30). சுமை வாகன ஓட்டுநரான இவா், நாம் தமிழா் கட்சியின் மாவட்ட பொருளாளராகவும் உள்ளாா். இக்கட்சி சாா்பில் கம்மங்குடி வளைவில் ஞாயிற்றுக்கிழமை திருமுனைக் கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதற்காக, அன்றைய தினம் சுமை வாகனத்தில் பிளாஸ்டிக் சோ்களை ஏற்றிக்கொண்டு, ஆதிச்சபுரம் பிரதான சாலையில் ரவிச்சந்திரன் சென்றுகொண்டிருந்தாா். அப்போது, அந்த வழியாக வேதாரண்யம் மறைஞாயநல்லூா் பகுதியைச் சோ்ந்த சு. செல்வராஜ்(70) ஓட்டிவந்த காருடன் சுமை வாகனம் மோதியது.
இதில், காயமடைந்த செல்வராஜ், அவரது மனைவி வைரமணி (62) ஆகியோா் திருவாரூா் தனியாா் மருத்துவமனையிலும், ரவிச்சந்திரன் மன்னாா்குடி அரசு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டனா்.
இந்த விபத்து குறித்து கோட்டூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.