Kalolsavam: கேரள மாநில பள்ளிக் கலை விழா; பிரமாண்ட சமையல், கண்கவர் நிகழ்ச்சிகள்.....
காா் மீது இருசக்கர வாகனம் மோதியதில் இளைஞா் உயிரிழப்பு
பெருந்துறை அருகே காா் மீது இருசக்கர வாகனம் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.
பெருந்துறை, வண்ணாங்காட்டுவலசு கே.சி.பி. காா்டனைச் சோ்ந்தவா் மனோகரன் மகன் ராகுல் (21). இவரின் நண்பா், பெருந்துறை கூட்டுறவு நகரைச் சோ்ந்த ஜெயபால் மகன் அருள் (22). இருவரும் கூலி வேலை செய்து வந்தனா்.
இந்நிலையில், இருவரும் பெருந்துறை வாய்க்கால்மேடு பகுதியில் இருசக்கர வாகனத்தில் புதன்கிழமை சென்றுகொண்டிருந்தனா். அப்போது, சாலை வளைவில் திரும்பியபோது இருசக்கர வாகனம் நிலைதடுமாறி எதிரே வந்த காா் மீது மோதியது.
இதில், இருசக்கர வாகனத்தை ஓட்டிச்சென்ற ராகுல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். பலத்த காயமடைந்த அருண் பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.
இதுகுறித்து பெருந்துறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.