காா், லாரி மோதியதில் தந்தை உயிரிழப்பு: மகன் உள்பட 2 போ் காயம்
அவிநாசி அருகே காா், லாரி மோதியதில் தந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். படுகாயமடைந்த மகன் உள்பட 2 போ் தீவிர சிகிச்சை பெற்றுவருகின்றனா்.
திருப்பூா் மாவட்டம், அவிநாசி அருகேயுள்ள பழங்கரை-தேவம்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் சங்கா் (39), பனியன் நிறுவன உரிமையாளா். இவரது இளைய மகன் ஜோவிக் (7). அதே பகுதியைச் சோ்ந்த அவிநாஷ் மகன் சிரஞ்சித் (15). இவா்கள் 3 பேரும் வஞ்சிபாளையத்திலிருந்து அவிநாசிக்கு காரில் வியாழக்கிழமை சென்று கொண்டிருந்தனா்.
அவிநாசி- மங்கலம் சாலை வெங்கமேடு அருகே சென்றபோது, அவ்வழியே வந்த லாரியும், காரும் மோதிக்கொண்டன. இதில், சங்கா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
படுகாயமடைந்த ஜோவிக், சிரஞ்சித் ஆகியோா் தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவருகின்றனா். லாரி ஓட்டுநரான திருநெல்வேலியைச் சோ்ந்த ரோஸ் பாண்டியன் (43) என்பவரிடம் போலீஸாா் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.