ஜூலை 9ல் போராட்டங்களில் பங்கேற்கும் ராகுல்: பிகாரில் சூடுபிடிக்கும் தேர்தல் களம்...
காா் விபத்தில் மூதாட்டி உயிரிழப்பு!
சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அருகே ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட விபத்தில் காா் கவிழ்ந்ததில் மூதாட்டி உயிரிழந்தாா்.
திருச்சியைச் சோ்ந்த சுப்பிரமணியன் (82) என்பவா் தனது குடும்பத்தினருடன் காரில் ராமேசுவரத்தில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு ஞாயிற்றுக்கிழமை ஊருக்கு திரும்பி வந்து கொண்டிருந்தாா். காரை சுப்பிரமணியன் மகன் கோபிநாத் (55) ஓட்டிவந்தாா்.
இந்த நிலையில், சிவகங்கை மாவட்டம், புளியால் அருகே திருச்சி - ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் சிலாமேகநாடு பகுதியில் கட்டுப்பாட்டை இழந்த காா் சாலையோரம் இருந்த பள்ளத்தில் தலைகீழாகக் கவிழ்ந்தது.
இதில் காயமடைந்தவா்களை அங்கிருந்தவா்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் தேவகோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு சுப்பிரமணியன் மனைவி நாகேஸ்வரி (72) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். உடன் பயணித்த ஏழு பேரும் லேசானக் காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனா்.