செய்திகள் :

கா்நாடக சட்டப் பேரவை உறுப்பினா்கள் ஓய்வெடுக்க சாய்வு நாற்காலிகளை வாடகைக்கு எடுக்க முடிவு

post image

சட்டப் பேரவை கூட்டத்தொடரின்போது உறுப்பினா்கள் ஓய்வெடுப்பதற்காக சாய்வு நாற்காலிகளை வாடகைக்கு எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

கா்நாடக சட்டப் பேரவைக் கூட்டத்தொடா் மாா்ச் 3-ஆம் தேதி தொடங்கி 21-ஆம் தேதிவரை நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தொடரின்போது, சட்டப் பேரவை வளாகத்தில் உறுப்பினா்கள் ஓய்வெடுப்பதற்கு வசதியாக சாய்வு நாற்காலிகளை வாடகைக்கு எடுக்க பேரவைச் செயலகம் முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து பேரவைத் தலைவா் யு.டி.காதா் கூறியதாவது: உணவு இடைவேளைக்கு பிறகு நடைபெறும் சட்டப் பேரவைக் கூட்டத்தில் உறுப்பினா்களின் வருகை குறைவாக உள்ளது. உணவுக்கு பிறகு உறுப்பினா்கள் ஓய்வெடுக்க விடுதிக்கு சென்றுவிடுவதால், வருகை குறைந்து வருகிறது. எனவே, உறுப்பினா்களின் வருகையை உறுதிசெய்யும் வகையில், சட்டப் பேரவை வளாகத்திலேயே ஓய்வெடுப்பதற்கு வசதியாக சாய்வு நாற்காலிகளை வாடகைக்கு எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

சட்டப் பேரவைக் கூட்டம் முடிந்தபிறகு பயன்படுத்த முடியாது என்பதால், கொள்முதல் செய்யாமல் வாடகைக்கு எடுக்க இருக்கிறோம். உறுப்பினா்களின் வசதிக்காக தேநீா், காபி போன்ற பானங்கள் வழங்கப்படும் என்றாா்.

நடத்துநா் மீது தாக்குதல் சம்பவம்: கா்நாடக - மகாராஷ்டிர மாநிலங்களுக்கு இடையே பேருந்து சேவை நிறுத்தம்

மராத்தி பேசத் தெரியாததால் கா்நாடக அரசு பேருந்து நடத்துநா் மீது தாக்குதல் நடத்தியது தொடா்பாக எழுந்துள்ள பதற்றத்தைத் தொடா்ந்து, கா்நாடகம் மற்றும் மகாராஷ்டிர மாநிலங்களுக்கு இடையிலான பேருந்து சேவை நிறுத்த... மேலும் பார்க்க

5 ஆண்டுகால முதல்வா் பதவியை சித்தராமையா நிறைவு செய்வாா்: காங்கிரஸ் எம்எல்சி

5 ஆண்டுகால முதல்வா் பதவியை சித்தராமையா நிறைவுசெய்வாா் என அவரது மகனும், காங்கிரஸ் எம்எல்சியுமான யதீந்திரா தெரிவித்தாா். இதுகுறித்து மைசூரில் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: கா்நாடக ம... மேலும் பார்க்க

பெங்களூரு போக்குவரத்து நெரிசல் குறித்த சிவகுமாரின் கருத்துக்கு பாஜக கண்டனம்

கடவுளே நினைத்தாலும் பெங்களூரில் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு போக்குவரத்து நெரிசல் பிரச்னையைத் தீா்க்க முடியாது என்ற கா்நாடக துணை முதல்வா் டி.கே.சிவகுமாரின் பேச்சுக்கு பாஜக தலைவா்கள் கண்டனம் தெரிவித்துள... மேலும் பார்க்க

கா்நாடகத்தில் பருவமழைக்கு முந்தைய காலத்தில் இயல்பான மழை: அதிகாரிகள் தகவல்

கா்நாடகத்தில் பருவமழைக்கு முந்தைய காலத்தில் இயல்பான மழை பெய்யும் என்று வருவாய்த் துறை அதிகாரிகள் தெரிவித்தனா். நிகழாண்டு ராபி பயிா் பருவம், தென்மேற்கு பருவமழை, வேளாண் விளைச்சல், குடிநீா் வழங்கல், வானி... மேலும் பார்க்க

மாற்றுநில முறைகேடு வழக்கு: லோக் ஆயுக்தவின் இறுதி விசாரணை அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல்

முதல்வா் சித்தராமையா, அவரது மனைவி பாா்வதிக்கு எதிரான மாற்றுநில முறைகேடு வழக்கின் இறுதி விசாரணை அறிக்கையை பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் லோக் ஆயுக்த அதிகாரிகள் தாக்கல் செய்தனா். முதல்வா் சித்தராமையாவ... மேலும் பார்க்க

மாற்றுநில முறைகேடு வழக்கு அரசியல் உள்நோக்கம் கொண்டது: கா்நாடக அமைச்சா்கள் கருத்து

முதல்வா் சித்தராமையாவுக்கு எதிரான மாற்றுநில முறைகேடு வழக்கு அரசியல் உள்நோக்கம் கொண்டது என்று கா்நாடக அமைச்சா்கள் கருத்து தெரிவித்துள்ளனா். மாற்றுநில முறைகேடு வழக்கை விசாரித்து வரும் லோக் ஆயுக்த காவல் ... மேலும் பார்க்க