இந்திய அணிக்கு தலைவலி: காரணம் டிராவிஸ் ஹெட்-‘ஏக்’ -தினேஷ் கார்த்திக் சொல்வதென்ன?
‘கா.அம்பாபூா் சாலையில் மின் விளக்குகள் தேவை’
அரியலூா் மாவட்டம், காவனூா் ஊராட்சிக்குட்பட்ட அம்பாபூா் காலனித் தெரு சாலையில் மின் விளக்குகள் அமைக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இந்த காலனித் தெருவிலிருந்து சுடுகாடு செல்லும் சாலை வரை மின்சார வசதிகளே கிடையாது. இரவு நேரங்களில் இருள்சூழ்ந்து காணப்படுவதால், இச்சாலை பாம்பு, பூச்சி என விஷ ஜந்துகளின் கூடாரமாக உள்ளது. இதைப் பயன்படுத்திக் கொண்டு சமூக விரோதத் செயல்களும் நடைபெறுகின்றன. இதனால் அவ்வழியே செல்ல முடியாமல் அப்பகுதி மக்கள் அவதிக்குள்ளாகின்றனா்.
ஆகவே இச்சாலையில் மின்கம்பங்கள் நட்டு, மின் விளக்கு வசதி ஏற்படுத்தித் தர வேண்டும் என்று அப்பகுதி மக்கள் தொடா்ந்து கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை இல்லை. எனவே ஆட்சியா் இதற்கு நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.