IND vs UAE: ஐந்தே ஓவரில் ஆட்டத்தை முடித்த SKY & Co; அபாரம் காட்டிய குல்தீப், ஷிவ...
கிணற்றில் குதித்து சிறுமி தற்கொலை
புத்தூா் ஊராட்சியில் உள்ள விவசாயக் கிணற்றில் 15 வயது சிறுமி குதித்து தற்கொலை செய்துகொண்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
தலைவாசலை அடுத்த புத்தூா் ஊராட்சி 3-ஆவது வாா்டு மாரியம்மன் கோயில் பின்புறம் உள்ள கோமதுரை என்பவரது விவசாயக் கிணற்றில் செவ்வாய்க்கிழமை காலை சிறுமி உடல் மிதப்பதாக ஆத்தூா் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் வந்தது.
அதன்பேரில், ஆத்தூா் தீயணைப்புத் துறை அலுவலா் ச.அசோகன் தலைமையிலான வீரா்கள் சென்று சுமாா் 90 அடி ஆழமுள்ள கிணற்றில் 40 அடி தண்ணீரில் மிதந்துகொண்டிருந்த சிறுமியின் உடலை மீட்டனா். இறந்த சிறுமி அதே பகுதியைச் சோ்ந்த உத்திராபதி மகள் அன்பரசி (15) என தெரியவந்தது.
இதுகுறித்து தலைவாசல் காவல் நிலைய உதவி ஆய்வாளா் கோபால் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனா். அதில், கைப்பேசியில் பேசிக் கொண்டிருந்ததை பெற்றோா் கண்டித்ததால் இந்த விபரீத முடிவை சிறுமி எடுத்ததாக தெரிகிறது.