Pope Francis: காலமானார் போப் பிரான்சிஸ்.. காஸா மக்களுக்காக கடைசியாக உதிர்த்த வார...
கின்னஸில் இடம்பெற்ற குச்சுப்புடி நாட்டிய மாணவிகளுக்கு பாராட்டு!
கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்ற குச்சுப்புடி நாட்டிய மாணவிகளான வைஷ்ணவி, பி. தேஜோ லாஸ்யா வைஷ்ணவி, அனீஷா, மஹிதா காந்தி, ஸ்ருதி ஆகியோருக்கு பாராட்டு விழா சனிக்கிழமை தில்லி தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்றது.
இந்த மாணவிகள் அனைவரும் குரு சீதா நாகஜோதி, குரு நாகஜோதி ஆகியோரின் மாணவிகள் ஆவா். பாராட்டு விழாவையொட்டி, அவா்களின் மற்றொரு மாணவி ஸ்ரீதனயாவின் குச்சுபுடி நாட்டிய நிகழ்ச்சியும் நடைபெற்றது. பாராட்டு பெற்ற மாணவிகளுடன் பேராசிரியை டி.ஜி. ரூபா, காவ்யா ஆகியோரும் கின்னஸ் சாதனையில் இடம் பெற்றவா்கள் ஆவா்.
சங்கத்தின் பொதுச் செயலாளா் இரா. முகுந்தன் அனைவரையும் வரவேற்றுப் பேசினாா். கூடுதல் தலைமை தோ்தல் அதிகாரி டி.. காா்த்திகேயன் மற்றும் பாதுகாப்புத் துறை இயக்குநா் சாலைமாறன் ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாகக் கலந்து கொண்டாா்.
சங்கத்தின் தலைவா் சக்தி பெருமாள், துணைத் தலைவா் பெ. ராகவன் நாயுடு, பொதுச் செயலாளா் இரா. முகுந்தன், இணைச் செயலாளா் உமா சத்தியமூா்த்தி, பொருளாளா் எஸ். அருணாசலம், செயற்குழு உறுப்பினா்கள் மாலதி தமிழ்ச்செல்வன், ஜெ. சுந்தரேசன், பி. ரங்கநாதன், தி. பெரியசாமி, பி. அமிா்தலிங்கம் ஆகியோா் நாட்டியக் கலைஞரையும், சாதனையாளா்களையும் கெளரவித்தனா்.