செய்திகள் :

கியர்பாக்ஸ் முதல் டயர் வரை மாயம் - ஸ்டேஷன் பாதுகாப்பில் இருந்த விவசாயியின் பறிமுதல் வாகன பரிதாபம்

post image

நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகில் உள்ள சோலூர் கோக்கால் பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி நாகராஜ். கடந்த 2020 - ம் ஆண்டு அந்த பகுதியில் கடுமையான குடிநீர் பஞ்சம் ஏற்பட்ட நிலையில், அருகில் இருக்கும் தனியாருக்கு சொந்தமான இடத்தில் அனுமதியின்றி குடிநீரை மக்களுக்காக மஹிந்திரா பிக்-அப் வாகனம் மூலம் எடுத்திருக்கிறார் நாகராஜ். சம்பந்தப்பட்டவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் நாகராஜின் வாகனத்தை பறிமுதல் செய்த காவல்துறையினர் வழக்குபதிவும் செய்துள்ளனர். இது தொடர்பான வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், வழக்கைத் திரும்ப பெற்றுள்ளனர்.

புகார் அளித்த நாகராஜ்

17,110 ரூபாய் பணத்தை செலுத்தி விட்டு வாகனத்தை எடுத்துச் செல்லுமாறு புதுமந்து காவல்நிலையத்தில் இருந்து நாகராஜிற்கு அழைப்பு வந்திருக்கிறது. ஸ்டேஷனுக்குச் சென்று வாகனத்தை பார்த்த நாகராஜிற்கு அதிர்ச்சி மட்டுமே மிஞ்சியிருக்கிறது‌. வாகனத்தின் பல உதிரி பாகங்கள் திருடப்பட்டிருப்பதைக் கண்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்திருக்கிறார்.

இது குறித்து பேசும் விவசாயி நாகராஜ், " எனது வாகனத்தை புதுமுந்து போலீஸார் கடந்த 2020 -ம் ஆண்டு பறிமுதல் செய்து அவர்கள் பொறுப்பில் வைத்திருந்தனர். இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த போது கூடுதல் எஸ்.பி அலுவலகத்துக்கு என்னை அழைத்து வழக்கை திரும்பப் பெற்றுவிட்டதாக கூறினர். பணத்தை கட்டி, எனது வாகனத்தை எடுக்க புதுமந்து காவல்நிலையம் சென்றேன்.

உதிரி பாகங்கள் மாயம்

எனது வாகனத்தில் இருந்து கியர்பாக்ஸ், டயர், ஸ்பீடாமீட்டர், செல்ப் மோட்டார், பேட்டரி உட்பட்ட பல பொருட்கள் காணாமல் போயிருந்தது. வாகனத்தை இயக்கவே முடியாத நிலையில் இருக்கிறது. அவர்களுக்கு எதுவும் தெரியாது என்கிறார்கள்.

புதுமந்து காவல்நிலையத்தின் பொறுப்பில் இருந்த எனது வாகனத்தின் திருடு போன பொருட்களை மீட்டு தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என எஸ்‌.பி அலுவலகத்தில் புகார் அளித்திருக்கிறேன்" என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

கரூர்: பள்ளி மாணவிக்குப் பாலியல் தொல்லை; போக்சோவில் காவலர் கைது; நடந்தது என்ன?

கரூர் நகரக் காவல் உட்கோட்டத்திற்கு உட்பட்ட வெங்கமேடு காவல் நிலையத்தில் காவலராகப் பணியாற்றி வருபவர் நெரூர் ரங்கநாதன்பேட்டை பகுதியைச் சேர்ந்த இளவரசன் (வயது 41). இவர், பணி நிமித்தமாக வெங்கமேடு காவல் நிலை... மேலும் பார்க்க

"போலீஸ் கண் முன்னாடியே வெட்டி கொன்னுட்டாங்களே..." - பெரம்பலூரை உலுக்கிய படுகொலை சம்பவம்

பெரம்​பலூர் மாவட்டம், வேப்​பந்​தட்டை வட்டம் கை.களத்​தூர் காந்தி நகரைச் சேர்ந்​தவர் மணிகண்​டன்​ (வயது 32). அதே பகுதியைச் சேர்ந்​தவர் தேவேந்​திரன்​ (வயது 30). இருவரும் அந்த பகுதியைச் சேர்ந்த ஒருவர் வைத்... மேலும் பார்க்க

ரவுடியுடன் பொங்கல் விழா கொண்டாடிய 3 போலீஸார்... ஆயுதப்படைக்குத் தூக்கியடித்த திருப்பத்தூர் எஸ்.பி!

திருப்பத்தூர் மாவட்டம், கந்திலி காவல் நிலையத்தில் கடந்த 14-ம் தேதி `சமத்துவ பொங்கல் விழா’ கொண்டாடப்பட்டது.இதில், சப்-இன்ஸ்பெக்டர்கள் கார்த்தி, அஜித்குமார் மற்றும் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் உமாபதி உள்பட... மேலும் பார்க்க

வேலூர்: "குளிக்கிறப்ப வீடியோ கால் பண்ணு..." - மாணவியிடம் அத்துமீறிய ஆசிரியர் கைது

வேலூர் கொணவட்டம் மதினாநகரைச் சேர்ந்தவர் முகமது சானேகா (35). இவர் தனியார்ப் பள்ளி ஒன்றில் கணித ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார்.இந்த நிலையில், பத்தாம் வகுப்பு பயிலும் மாணவி ஒருவரிடம் மாலை வீட்டுக்குச்... மேலும் பார்க்க

ஈரோடு: பைக்கில் அதிவேக பயணம்... சாலை விபத்தில் இன்ஸ்டா பிரபலம் உயிரிழப்பு

ஈரோடு கருங்கல்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பிரபல யூ டியூப் மற்றும் இன்ஸ்டா பிரபலமான ராகுல். இவர் நேற்று இரவு, கவுந்தப்பாடி பகுதியில் உள்ள தனது மாமியார் வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்... மேலும் பார்க்க

``குர்தா முழுக்க ரத்தம்; யாரென்று தெரியவில்லை.." - சைஃப் அலிகானை ஆட்டோவில் ஏற்றிச்சென்ற டிரைவர்

பாலிவுட் நடிகர் சைஃப் அலிகான் மீது தாக்குதல்..பாலிவுட் நடிகர் சைஃப் அலிகான் (Saif Ali Khan) இரண்டு நாட்களுக்கு முன்பு மும்பையில் உள்ள அவரது வீட்டில் அதிகாலையில் மர்ம நபரால் தாக்கப்பட்டார். உடம்பின் பல... மேலும் பார்க்க