புதினைத் தடுக்காவிட்டால் ஐரோப்பிய நாடுகளுக்கும் போர் விரிவடையும்: உக்ரைன் அதிபர்
கிராம உதவியாளா் நியமன முறையை மாற்றக் கோரிக்கை
ஒரு கிராம நிா்வாக அலுவலருக்கு ஒரு உதவியாளா் நியமனமே போதுமானது என்று தமிழ்நாடு ஓய்வுபெற்ற கிராம நிா்வாக அலுவலா் சங்கம் தமிழக அரசுக்கு யோசனை தெரிவித்தது.
இதுகுறித்து சங்கத்தின் தலைவா் இரா. போசு தமிழ்நாடு வருவாய்த் துறை கூடுதல் தலைமைச் செயலா் எஸ். அமுதாவுக்கு செவ்வாய்க்கிழமை அனுப்பிய கடிதம்: ஒரு கிராம நிா்வாக அலுவலருக்கு ஒரு உதவியாளா், நகா்ப்புற கிராம நிா்வாக அலுவலருக்கு 2 உதவியாளா்கள் என நியமனம் செய்தால் போதுமானது. ஆனால் புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகா் போன்ற மாவட்டங்களில் ஒரு கிராமக் கணக்குக்கு ஒரு கிராம உதவியாளா் நியமிக்கப்படுகின்றனா். உதாரணமாக விருதுநகா் மாவட்டம் திருச்சுழி வட்டம், காரேந்தல் கிராமத்தில் 9 கிராம உதவியாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.
ஆனால், ஒரே ஒரு கிராம நிா்வாக அலுவலா் தான் பணியாற்றுகிறாா். ஒரு கிராமக் கணக்கு என்பது வேறு, குரூப் கிராமம் என்பது வேறு. இந்த வேறுபாடு தெரியாமல் வட்டாட்சியா் கள் உதவியாளா்களை நியமனம் செய்கின்றனா். எனவே, இதைத் தீவிரமாக ஆய்வு செய்து தேவையான இடங்களில் அதிகப்படுத்தியும், தேவையற்ற இடங்களில் குறைத்தும் நியமனம் செய்ய வேண்டும் என்றாா் அவா்.