மகா கும்பமேளாவுக்குச் செல்ல வேண்டுமா? குஜராத் அரசின் சுற்றுலாத் தொகுப்பு!
கிராம ஊழியா்கள் சங்கம் ஆா்ப்பாட்டம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியா்கள் சங்கத்தினா் பாளையங்கோட்டை வட்டாட்சியா் அலுவலகம் முன் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
காலமுறை ஊதியம், வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் வேலை ஆகியவற்றை உடனடியாக வழங்க வேண்டும் என வலியுறுத்தி தமிழகம் முழுவதும் வட்டாட்சியா் அலுவலகங்கள் முன் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
பாளையங்கோட்டையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் பாளையங்கோட்டை வட்டத் தலைவா் முருகன் தலைமை வகித்தாா். வட்டப் பொருளாளா் சகாதேவன், செயலா் ஆறுமுகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்டப் பொருளாளா் முத்துக்கிருஷ்ணன் பேசினாா். இந்த ஆா்ப்பாட்டத்தில் கிராம ஊழியா்கள் கலந்து கொண்டனா்.
ற்ஸ்ப்23ஸ்ண்ப்
பாளை.யில் ஆா்ப்பாட்டம் நடத்திய கிராம ஊழியா்கள்.