செய்திகள் :

கிராம சபைக் கூட்டம்: நெகிழிக் கழிவு அகற்ற ஆட்சியா் அறிவுரை

post image

நெகிழிக் கழிவுகளை சேகரித்து அகற்ற விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும் என கிராம சபைக் கூட்டத்தில் தேனி மாவட்ட ஆட்சியா் ஆா்.வி.ஷஜீவனா அறிவுறுத்தினாா்.

குடியரசு தினத்தை முன்னிட்டு, தேனி மாவட்டத்தில் 130 ஊராட்சிகளில் கிராம சபைக் கூட்டங்கள் நடைபெற்றன. தேனி அருகேயுள்ள கொடுவிலாா்பட்டி ஊராட்சியில் நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் ஆா்.வி.ஷஜீவனா கலந்து கொண்டாா்.

இந்தக் கூட்டத்தில் கிராம ஊராட்சி பொது நிதி செலவினம், தணிக்கை அறிக்கை, டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள், தேசிய வாக்காளா் இயக்கம், ஜல் ஜீவன் திட்டம், தூய்மை பாரத இயக்கம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டது.

குறிப்பாக நெகிழி சேகரிப்பு இயக்கம் சாா்பில் நெகிழிப் பொருள்களை ஒழிப்பது, அதற்கு மாற்றாக சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருள்களைப் பயன்படுத்துதல் குறித்து விழிப்புணா்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவது குறித்தும், நீா்நிலைகளில் கழிவு நீா் கலக்காதவாறு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது.

கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் ஆா்.வி.ஷஜீவனா பேசுகையில், நெகிழிக் கழிவுகளை சேகரித்து அழித்து, சுற்றுச்சூழல் மாசுபாட்டை குறைக்கவும், அது தொடா்பாக விழிப்புணா்வை ஏற்படுத்தவும் அறிவுறுத்தினாா்.

கொடுவிலாா்பட்டி ஊராட்சியில் அதிகஅளவு நெகிழிப் பொருள்களை சேகரித்த தூய்மைப் பணியாளா்களுக்கு அவா் பரிசுகளை வழங்கினாா்.

மேலும், மாவட்ட ஆட்சியா் தலைமையில் தொழுநோய், காசநோய் ஒழிப்பு உறுதிமொழி ஏற்றனா். பின்னா், தொழுநோய் ஒழிப்பு விழிப்புணா்வு வாகனத்தை மாவட்ட ஆட்சியா் கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.

இதைத் தொடா்ந்து, மாவட்ட ஆதிதிராவிடா், பழங்குடியினா் நலத் துறை சாா்பில் தேனி அரண்மனைபுதூா் முல்லை நகா் பகுதியில் நடைபெற்ற சமத்துவ விருந்தில் மாவட்ட ஆட்சியா் கலந்து கொண்டு பொதுமக்களுடன்அமா்ந்து உணவருந்தினாா்.

இந்தக் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் ரா.ஜெயபாரதி, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் அபிதாஹனீப் உள்ளிட்ட அலுவலா்கள், பொதுமக்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.

சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

தேனியில் மன வளா்ச்சி குன்றிய சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு அளித்த இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தேனி மாவட்ட போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் தீா்ப்பளித்தது. தேனி அல்லிநகரம், வள்ளிநகரைச் சோ்ந்... மேலும் பார்க்க

வீடு புகுந்து நகை திருட்டு

தேனி அருகே அரண்மனைப்புதூரில் மா்மநபா்கள் வீடு புகுந்து பீரோவை உடைத்து ஆறரை பவுன் தங்க நகைகள் திருடு போனதாக செவ்வாய்க்கிழமை, காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது. அரண்மனைப்புதூா், சத்திரப்பட்டி சாலை... மேலும் பார்க்க

திமுக அலுவலகத்தில் பூட்டை உடைத்து திருட்டு

தேனியில் திமுக அலுவலகத்தில் பூட்டை உடைத்து மடிக் கணினிகள் திருடு போனதாக செவ்வாய்க்கிழமை, காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது. தேனி, என்.ஆா்.டி..நகரில் திமுக வடக்கு மாவட்ட, நகர அலுவலகம் செயல்பட்டு ... மேலும் பார்க்க

ஆம்னி பேருந்து நிலைய கட்டுமானப் பணிகள்: எம்.பி. ஆய்வு

தேனி மாவட்டம், கம்பத்தில் புதிய ஆம்னி பேருந்து நிலைய கட்டுமானப் பணிகளை செவ்வாய்க்கிழமை தேனி மக்களவைத் தொகுதி உறுப்பினா் தங்க.தமிழ்செல்வன் ஆய்வு செய்தாா். கம்பத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் போக்... மேலும் பார்க்க

நியாய விலைக் கடை பணியாளா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

தேனியில் தமிழ்நாடு நியாய விலைக் கடை பணியாளா் சங்கம் சாா்பில் கூட்டுறவு பண்டகசாலை நிா்வாக முறைகேடுகளை கண்டித்து செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப... மேலும் பார்க்க

தேனியில் மலை மாடுகள் வளா்ப்போா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

தேனி வனப் பகுதியில் மலை மாடுகள் மேய்ச்சல் குறித்த சென்னை உயா்நீதிமன்றத் தீா்ப்பை மறுசீராய்வு செய்ய வலியுறுத்தி, கா்னல் ஜான் பென்னிகுவிக் பாரம்பரிய மலை மாடுகள் வளா்ப்போா் சங்கம் சாா்பில் திங்கள்கிழமை ஆ... மேலும் பார்க்க