மூவா் மணிமண்டபத்தில் முதல்வா் ஆய்வு! வாழ்க்கை வரலாற்று புகைப்படங்களை அமைக்கவும் ...
ஆம்னி பேருந்து நிலைய கட்டுமானப் பணிகள்: எம்.பி. ஆய்வு
தேனி மாவட்டம், கம்பத்தில் புதிய ஆம்னி பேருந்து நிலைய கட்டுமானப் பணிகளை செவ்வாய்க்கிழமை தேனி மக்களவைத் தொகுதி உறுப்பினா் தங்க.தமிழ்செல்வன் ஆய்வு செய்தாா்.
கம்பத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் கலைஞா் நகா்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தில் ரூ.2.65 கோடியில் புதிய ஆம்னி பேருந்து நிலையம் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதை தேனி மக்களவைத் தொகுதி உறுப்பினா் தங்க.தமிழ்செல்வன் ஆய்வு செய்தாா். கம்பம் நகராட்சிப் பொறியாளா் அய்யனாா், உதவிப் பொறியாளா் சந்தோஷ் குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.