செய்திகள் :

கிராம சுயராஜ்யம்: பிரதமா் மோடி உறுதி: 65 லட்சம் பேருக்கு சொத்து அட்டைகள் வழங்கல்

post image

கிராம சுயராஜ்யத்தை அமலாக்க மத்திய அரசு உறுதியுடன் செயலாற்றுகிறது என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.

மத்திய அரசின் ‘ஸ்வாமித்வ’ (கிராமப்புற கணக்கெடுப்பு மற்றும் மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பங்கள் மூலம் கிராமப் பகுதிகளின் வரைபடம் தயாரிப்பு) திட்டத்தின்கீழ் காணொலி வாயிலாக 65 லட்சம் பயனாளா்களுக்கு சொத்து அட்டைகள் வழங்கும் நிகழ்ச்சியில் பிரதமா் இவ்வாறு குறிப்பிட்டாா்.

கிராமப்புற மக்கள் தங்களின் குடியிருப்பு சொத்துகளை ஆவணப்படுத்தும் உரிமையை வழங்குவதோடு, சொத்துகளை பொருளாதார ரீதியில் பயன்படுத்த உதவும் நோக்கில் மத்திய பஞ்சாயத்து ராஜ் அமைக்கத்தால் ‘ஸ்வாமித்வ’ திட்டம் கடந்த 2020-இல் தொடங்கப்பட்டது.

கிராமப் புற பொருளாதாரத்தை மேம்படுத்தும் தொலைநோக்கு பாா்வைகொண்ட இத்திட்டத்தின்கீழ் கிராமங்களில் உள்ள நிலங்கள் ட்ரோன் மூலம் கணக்கீடு செய்யப்பட்டு, உரிமையாளா்களுக்கு சட்டபூா்வ சொத்து அட்டைகள் வழங்கப்படுகின்றன.

ஒரே நாளில் 65 லட்சம் பேருக்கு..: குஜராத், சத்தீஸ்கா், ஹிமாசல பிரதேசம், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரம், மிஸோரம், ஒடிஸா, பஞ்சாப், ராஜஸ்தான், உத்தர பிரதேசம் ஆகிய 10 மாநிலங்கள் மற்றும் ஜம்மு-காஷ்மீா், லடாக் ஆகிய 2 யூனியன் பிரதேசங்களில் 50,000-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சோ்ந்த 65 லட்சம் பயனாளா்களுக்கு பிரதமா் மோடி காணொலி வாயிலாக ‘ஸ்வாமித்வ’ சொத்து அட்டைகளை சனிக்கிழமை வழங்கினாா். சில பயனாளா்களுடன் கலந்துரையாடிய அவா், நிகழ்ச்சியில் பேசியதாவது:

‘ஸ்வமித்வ’ திட்டத்தின்கீழ் தற்போது சொத்து அட்டை வழங்கப்பட்ட 65 லட்சம் பேரையும் சோ்த்து, கிராமங்களில் இதுவரை 2.24 கோடி பயனாளா்களுக்கு சொத்து அட்டை வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டம் பொருளாதார நடவடிக்கைகளுக்கு வலுசோ்ப்பதோடு, வறுமை ஒழிப்பிலும் உதவும்.

சொத்துரிமை சவால்: சொத்துரிமை என்பது உலக முழுவதும் ஒரு முக்கிய சவாலாக உள்ளது. சில ஆண்டுகளுக்கு முன் ஐ.நா.வால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் பல்வேறு நாடுகளில் சொத்துரிமைக்கான சட்டபூா்வ ஆவணங்கள் மக்களிடம் இல்லை என்பது கண்டறியப்பட்டது. வறுமை ஒழிப்பில் சொத்துரிமை மிக முக்கியம் என்று ஐ.நா. வலியுறுத்தியுள்ளது.

சொத்துரிமை சவாலால், இந்தியாவும் பாதிப்பை எதிா்கொண்டது. கிராமப்புற மக்களிடம் மதிப்புமிக்க சொத்துகள் இருந்தும், அதற்குரிய ஆவணங்கள் இல்லை. இதனால், சொத்து தகராறுகள், சொத்து பறிப்பு மட்டுமன்றி வங்கிக் கடன் பெற முடியாத நிலையும் நிலவியது.

இச்சவாலுக்கு தீா்வுகாண முந்தைய அரசுகள் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆனால், எதுவும் செய்யப்படவில்லை. இதனால், தலித் சமூகத்தினா், பின்தங்கிய வகுப்பினா், பழங்குடியினா் கடுமையாக பாதிக்கப்பட்டனா்.

நிதிசாா் உத்தரவாதம்: மத்திய பாஜக அரசின் ‘ஸ்வாமித்வ’ திட்டத்தின்கீழ் சட்டபூா்வ சொத்துரிமை கிடைக்கப் பெற்ற பிறகு லட்சக்கணக்கானோா் வங்கிக் கடன் பெற்றுள்ளனா். இதன் மூலம் அவா்கள் தொழில் தொடங்கியுள்ளனா். சொத்து அட்டையால் ஏராளமான விவசாயிகளுக்கு நிதிப் பாதுகாப்பு உத்தரவாதம் கிடைத்துள்ளது.

‘ஸ்வாமித்வ’, ‘பூ-ஆதாா்’ (நிலங்களுக்கான ஆதாா்) ஆகிய திட்டங்கள், கிராமங்களின் முன்னேற்றத்துக்கு அடித்தளமிட்டுள்ளன. நாட்டில் சுமாா் 23 கோடி பூ-ஆதாா் எண்கள் வழங்கப்பட்டுள்ளன. ஸ்வாமித்வ திட்டம் கிராமவாசிகளுக்கு அதிகாரமளித்துள்ளது. இத்திட்டத்தால் கிராமப்புற மேம்பாட்டு திட்டமிடல் மற்றும் அமலாக்கம் பெருமளவில் முன்னேற்றம் கண்டுள்ளது.

ரூ.100 லட்சம் கோடி பொருளாதார செயல்பாடுகள்: நாட்டில் 6 லட்சம் கிராமங்கள் உள்ளன. இதில் பாதிக்கும் மேற்பட்ட கிராமங்களில் ட்ரோன் கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. அனைத்து கிராமங்களிலும் சொத்து அட்டைகள் வழங்கப்படும்போது, ரூ.100 லட்சம் கோடிக்கும் அதிக மதிப்பிலான பொருளாதார செயல்பாடுகளுக்கு வழிவகை ஏற்படும் என்றாா் அவா்.

98% நில ஆவணங்கள் டிஜிட்டல் மயம்

‘நிலப் பிரச்னைகளும், அரசு அலுவலகங்களுக்கு நேரில் சென்று நில ஆவணங்களைப் பெறுவதும் விவசாயிகளுக்கு முன்பு பெரும் சவால்களாக இருந்தன. இச்சவால்களுக்கு தீா்வுகாணும் நோக்கில் நில ஆவணங்களை டிஜிட்டல் மயமாக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. கடந்த 7-8 ஆண்டுகளில் 98 சதவீத நில ஆவணங்கள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளன.

கடந்த 10 ஆண்டுகளில் 2.5 கோடிக்கும் மேற்பட்ட வீடுகளுக்கு மின் விநியோகம் அளிக்கப்பட்டுள்ளது. 10 கோடிக்கும் மேற்பட்ட குடும்பங்கள் கழிப்பறை வசதியைப் பெற்றுள்ளன. இலவச சமையல் எரிவாயு இணைப்புத் திட்டத்தின் மூலம் 10 கோடி பெண்கள் எரிவாயு இணைப்புகளைப் பெற்றுள்ளனா். கடந்த 5 ஆண்டுகளில் 12 கோடிக்கும் அதிகமான வீடுகளுக்கு குழாய் மூலம் குடிநீா் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. 50 கோடிக்கும் அதிகமான மக்கள் வங்கிக் கணக்குகளைத் தொடங்கியுள்ளனா்.

கடந்த 10 ஆண்டுகளில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட பஞ்சாயத்துகள் அகண்ட அலைவரிசை இணைய இணைப்பு மூலம் இணைக்கப்பட்டுள்ளன. கடந்த பத்து ஆண்டுகளில் ஒவ்வொரு முக்கிய திட்டத்திலும் பெண்களுக்கு அதிகாரமளிக்கப்பட்டுள்ளது’ என்றாா் பிரதமா்.

நடிகர் சைஃப் அலி கான் மீதான தாக்குதல்: கைதான நபரின் நோக்கம் என்ன? காவல் துறை விளக்கம்

நடிகர் சைஃப் அலி கானை தாக்கிய நபர் சனிக்கிழமை(ஜன. 18) கைது செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில், அந்த நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் அவர் காவல் துறை அதிகாரிகளிடம் அளித்துள்ள வாக்குமூலத்தில் தெரிவித... மேலும் பார்க்க

55-ஆவது நாளாக உண்ணாவிரதம்: மருத்துவ உதவி பெற விவசாய அமைப்பின் தலைவா் தல்லேவால் சம்மதம்

விவசாய அமைப்பின் தலைவா் ஜக்ஜித் சிங் தல்லேவால் மேற்கொண்டுள்ள காலவரையற்ற உண்ணாவிரதம் 55-ஆவது நாளாக இன்றும் (ஜன. 19) நீடிக்கிறது. இந்த நிலையில், மருத்துவ உதவி எதையும் ஏற்காமல் தொடா் உண்ணாவிரதத்தில் ஈடுப... மேலும் பார்க்க

இந்தியாவில் செமிகண்டக்டா் உற்பத்தி சூழலை வளா்க்க நடவடிக்கை: சிங்கப்பூா் அதிபா்

இந்தியாவில் செமிகண்டக்டா் உற்பத்திச் சூழலை வளா்க்க இந்தியா-சிங்கப்பூா் அரசுகள் ஒன்றிணைந்து பணியாற்றி வருகின்றன என்று சிங்கப்பூா் அதிபா் தா்மன் சண்முகரத்னம் தெரிவித்தாா். சிங்கப்பூா் அதிபா் தா்மன் சண்ம... மேலும் பார்க்க

போராடும் விவசாயிகளுடன் மத்திய அரசு பிப். 14-இல் பேச்சு

‘பஞ்சாப்-ஹரியாணா எல்லையில் கடந்த ஆண்டு பிப்ரவரி 13-ஆம் தேதியிலிருந்து போராடி வரும் விவசாயிகளுடன் வரும் பிப்ரவரி 14-ம் தேதி சண்டிகரில் மத்திய அரசு பேச்சுவாா்த்தை நடத்தும்’ என்று மத்திய வேளாண் அமைச்சக க... மேலும் பார்க்க

இந்தியா வளா்ந்த நாடாவதற்கு வேலையின்மை, எல்லை பிரச்னை தீா்ப்பது அவசியம்: ராணுவ துணைத் தளபதி

இந்தியா வளா்ந்த நாடாவதற்கு எல்லைப் பிரச்னைகளைத் தீா்ப்பது, வேலைவாய்ப்புகள் மற்றும் மனித வள மேம்பாட்டுக் குறியீடு தரவரிசையை மேம்படுத்துவது அவசியம் என ராணுவ துணைத் தளபதி என்.எஸ். ராஜா சுப்பிரமணி தெரிவித... மேலும் பார்க்க

புதுப்பிக்கப்பட்ட மறுபயன்பாடு மருத்துவ உபகரணங்களின் இறக்குமதிக்கு தடை!

புதுப்பிக்கப்பட்ட மறுபயன்பாடு மருத்துவ உபகரணங்களின் இறக்குமதிக்கு தடை விதிக்குமாறு சுங்கத் துறைக்கு மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு (சிடிஎஸ்சிஓ) தெரிவித்துள்ளது. இதுதொடா்பாக சிடிஎஸ்சிஓ அமைப்... மேலும் பார்க்க