செய்திகள் :

கிருஷ்ணகிரி பள்ளி மாணவி வல்லுறவு: பிப். 8-ல் அதிமுக ஆர்ப்பாட்டம்!

post image

கிருஷ்ணகிரி அருகே பள்ளி மாணவியை 3 ஆசிரியர்கள் பாலியல் வன்கொடுமை செய்ததை கண்டித்து சனிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 8 ஆம் வகுப்பு படிக்கும் மாணவியை 3 ஆசிரியர்கள் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

இதனால் அந்த மாணவி கர்ப்பமாகி கருக்கலைப்பு செய்ததாகவும் கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில் 3 ஆசிரியர்கள் மீது போக்ஸோ சட்டத்தில் வழக்குப் பதிந்து காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

இதையும் படிக்க : காதலர் நாளன்று புதிய தொழில் தொடங்கும் கங்கனா!

இந்த நிலையில், கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையம் அருகே சனிக்கிழமை காலை 10 மணிக்கு அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

அதிமுக துணை பொதுச் செயலரும் முன்னாள் அமைச்சருமான கே.பி. முனுசாமி தலைமையில் நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கிருஷ்ணகிரி மாவட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

நெல்லையில் சூரிய மின் உற்பத்தி ஆலையைத் தொடக்கிவைத்தார் முதல்வர்!

நெல்லை மாவட்டம் கங்கைகொண்டான் சிப்காட் தொழிற்பூங்காவில் டாடா நிறுவனத்தின் சூரிய மின் உற்பத்தி ஆலையை முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று(பிப். 6) தொடக்கிவைத்தார். தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் ஒவ்வொரு மாவட்ட... மேலும் பார்க்க

நெல்லையில் முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு!

இரண்டு நாள் பயணமாக நெல்லை வந்த முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் ஒவ்வொரு மாவட்டமாகச் சென்று கள ஆய்வுப்பணிகளை மேற்கொண்டு வருகிறார். மேலும் அந்தந்... மேலும் பார்க்க

தமிழக ஆளுநர் மௌனமாக இருக்கலாமா? உச்ச நீதிமன்றம் கேள்வி

புது தில்லி: ஆளுநருக்கு எதிராக தமிழக அரசின் மனு மீதான வாதங்கள் தொடங்கும் முன் விரிவாக ஆராய வேண்டிய பிரச்னைகள் குறித்து பட்டியலிட உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.மசோதாக்களை கிடப்பில் வைத்திர... மேலும் பார்க்க

அண்ணா பல்கலை. வழக்கு: ஞானசேகரனுக்கு குரல் பரிசோதனை!

சென்னை: அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் நீதிமன்றக் காவலில் உள்ள ஞானசேகரனுக்கு வியாழக்கிழமை குரல் பரிசோதனை செய்யப்படுகிறது.கடந்த டிச.23-ஆம் தேதி அண்ணா பல்கலை. வளாகத்தில் மாணவ... மேலும் பார்க்க

கிளாம்பாக்கம் சிறுமி வல்லுறவு: ஆட்டோ ஓட்டுநர் உள்பட இருவர் கைது!

கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் நின்றிருந்த 18 வயது மேற்கு வங்க சிறுமி ஆட்டோவில் கடத்தி பாலியல் துன்புறுத்தல் செய்த வழக்கில் இரண்டு பேரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.மேலும் ஒருவரை தேடும் பணிய... மேலும் பார்க்க

முறையாக சமைக்காத இறைச்சியிலிருந்து பரவும் ஜிபிஎஸ்: மருத்துவா்கள் எச்சரிக்கை

பால் மற்றும் இறைச்சியை முறையாக கொதிக்க வைத்து சமைக்காவிடில் அதிலிருந்து கில்லன் பாரே சின்ட்ரோம் (ஜிபிஎஸ்) நோயைப் பரப்பும் பாக்டீரியா உருவாகலாம் என மருத்துவா்கள் எச்சரித்துள்ளனா். பாக்டீரியா மற்றும் வை... மேலும் பார்க்க