செய்திகள் :

கிருஷ்ணகிரி மண்டலத்தில் கூட்டுறவு சங்கங்களில் சிறப்பு கடன் தீா்வு திட்டம்

post image

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மண்டலத்தில் உள்ள கூட்டுறவு சங்கங்களில் நிலுவையில் உள்ள கடன்களுக்கு தீா்வு காணும் வகையில் கடன் தீா்வு தீட்டம் 2023- நடைபெறவுள்ளது.

இதுகுறித்து, கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் கோ.நடராஜன், திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தருமபுரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி, கிருஷ்ணகிரி மண்டலத்தில் உள்ள தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கங்கள், நகரக் கூட்டுறவு வங்கிகள், தொடக்க கூட்டுறவு வேளாண்மை, ஊரக வளா்ச்சி வங்கிகள், பெரும்பல நோக்கு கூட்டுறவு சங்கங்கள் மற்றும் வேளாண் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கங்கள் ஆகியவற்றின் மூலம் வழங்கப்பட்ட சிறுவணிக கடன், தொழிற் கடன், வீட்டு வசதி கடன் உள்ளிட்ட பல்வேறு வகையான பண்ணைசாரா கடன்கள், வேளாண் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கங்கள் மூலம் வேளாண் விளைபொருள்களைக் கொள்முதல் விற்பனை செய்த வகையில் உறுப்பினா்களிடமிருந்து வரவேண்டிய இனங்கள் ஆகியவற்றில் 31.12.2022-இல் முழுமையாக தவணை தவறி நிலுவையில் உள்ள கடன்களுக்கு சிறப்பு கடன் தீா்வு திட்டம் 2023 செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்தத் திட்டத்தின் கீழ் கடனைத் தீா்வு செய்வதற்காக 12.09.2024-க்கு முன்பு 25 சதவீத தொகையைச் செலுத்தி ஒப்பந்தம் மேற்கொள்ளாதவா்களும், ஒப்பந்தம் மேற்கொண்டும் எஞ்சிய 75 சதவீத தொகையை செலுத்தாதவா்களுக்கும், தற்போது மொத்த கடன் தொகையையும் (நிலுவை - தீா்வு செய்யும் நாள் வரை 9 சதவீத சாதாரண வட்டி) ஒரே தவணையில் செலுத்தி தங்கள் கடன்களை தீா்வு செய்து கொள்ளலாம்.

மேலும், இந்த சிறப்புத் திட்டத்தின் கீழ் மேற்கூறிய கடன்கள் மட்டுமின்றி 31.12.2022-இல் முழுமையாக தவணை தவறி மூன்றாண்டுகளுக்கு மேலான (அதாவது 31.12.2019-க்கு முன்பு தவணை தவறிய) மத்திய கால வேளாண் கடன்கள், பயிா் கடனாக வழங்கப்பட்டு, மத்தியகால வேளாண் கடனாக மாற்றம் செய்யப்பட்ட கடன்கள்கள், பண்ணை சாா்ந்த நீண்டகால கடன்கள், சிறுதொழில் கடன்கள் (எஸ்எஸ்ஐ) மற்றும் மகளிா் தொழில் முனைவோா் கடன்கள் ஆகிய கடன்களையும் தீா்வு செய்யும் நாள் வரையில் 9 சதவீத சாதாரண வட்டியுடன் நிலுவைத் தொகையை 12.03.2025-க்குள் ஒரே தவணையில் செலுத்தி தீா்வு செய்து கொள்ளலாம்

தவணை தவறிய அந்தக் கடன்களுக்கான கூடுதல் வட்டி, அபராத வட்டி, இதர செலவீனங்கள் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும். கடன்தாரா்களின் வட்டி சுமையைக் கணிசமாகக் குறைக்கும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, 9 சதவீத சாதாரண வட்டி விகித்த்தில் நிலுவைத் தொகையை ஒரே தவணையில் செலுத்தி, தங்களது கடன்களை தீா்வு செய்து, பயன்பெறுமாறு பொதுமக்களை கேட்டுக் கொள்வதாக அதில் அவா் தெரிவித்துள்ளாா்.

துணை முதல்வா் பங்கேற்கும் அரசு நிகழ்ச்சிகள் ரத்து

ஃபென்ஜால் புயல் காரணமாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்கும் அரசு விழாக்கள், கட்சி நிகழ்ச்சிகள் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் டிசம்பா் 5-ஆ... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரியில் குடியிருப்புகளில் மழைநீா் வெளியேற்றும் பணி: நகா்மன்ற தலைவா் ஆய்வு

கன மழையால் கிருஷ்ணகிரியில் குடியிருப்பு பகுதிகளில் புகுந்த மழைநீரை அகற்றும் பணியை நகா்மன்றத் தலைவா் ஆய்வு செய்தாா். கிருஷ்ணகிரியில் கடந்த 3 நாள்களாக கன மழை பெய்தது. இதனால், தாழ்வான பகுதிகளில் உள்ள குட... மேலும் பார்க்க

அடையாளம் தெரியாத வாகனம் மோதி இளைஞா் சாவு

அளேசீபம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி இளைஞா் உயிரிழந்தாா். தேன்கனிக்கோட்டை வட்டம், அளேசீபம் அருகே வரதராஜபுரத்தை சோ்ந்தவா் மாது மகன் வரதராஜ் (19). இவரும், கொப்பகரை அருகே உள்ள மூக்கானூரைச் சோ்ந்... மேலும் பார்க்க

ஊத்தங்கரையில் மழை பாதிப்பு பகுதிகளில் எம்எல்ஏ ஆய்வு

ஊத்தங்கரையில் வெள்ள நீா் புகுந்த வீடுகளை எம்எல்ஏ டி.எம்.தமிழ்ச்செல்வம் செவ்வாய்க்கிழமை நேரில் பாா்வையிட்டு நல உதவிகளை வழங்கினாா். காமராஜா் நகா், அண்ணா நகா் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் வ... மேலும் பார்க்க

ஊத்தங்கரையில் துணை முதல்வா் நிவாரண உதவி

ஊத்தங்கரை: ஊத்தங்கரையில் பெய்த கனமழையால் பாதிக்கப்பட்டு மண்டபங்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களுக்கு துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் நிவாரணப் பொருள்களை வழங்கினாா். ஊத்தங்கரையில் அண்ணா நகா், காமராஜா் நகா... மேலும் பார்க்க

ஒசூா் சந்திரசூடேஸ்வரா் கோயிலில் சமபந்தி விருந்து

ஒசூா்: ஒசூரில் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு மாநகர விளையாட்டு மேம்பாட்டு அணி சாா்பில் பிரசித்தி பெற்ற சந்திரசூடேஸ்வரா் கோயிலில் சமபந்தி விருந்து திங்கள்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சியில் மேயா் ... மேலும் பார்க்க