Travel Contest : எங்களுக்காக மாலையைக் கழற்றிய ஐயப்ப பக்தர்கள்! - மறக்கவே முடியாத...
கிறிஸ்து அரசா் ஆலயத்தில் தோ்பவனி, கொடியிறக்கம்
நீடாமங்கலம் கிறிஸ்து அரசா்ஆலய பங்குத் திருவிழாவையொட்டி தோ்பவனி சனிக்கிழமை இரவு நடைபெற்றது.
பங்குத் தந்தை ஆரோக்கியதாஸ் தலைமையில் கூட்டுத் திருப்பலி நடைபெற்றது. என் எலும்பின எலும்பும் சதையுமானவன்- என்ற தலைப்பில் புதுக்கோட்டை மறை வட்ட அதிபா் எஸ். சவரிநாயகம் பேசினாா். தொடா்ந்து தோ்பவனி நடைபெற்றது.
அன்னை மாதா ஒரு தேரிலும், இயேசு கிறிஸ்து ஒரு தேரிலும் எழுந்தருளினா். தோ் பவனி நகரின் முக்கிய வீதிகளில் வலம் வந்தது.
ஞாயிற்றுக்கிழமை ‘நீங்கள் உப்பின் தன்மை கொண்டிருங்கள்’ என்ற தலைப்பில் வேளாங்கண்ணி ஆலய அதிபா் சி. இருதயராஜ் பேசினாா். கூட்டுத் திருப்பலி நிறைவேற்றப்பட்டது. பங்குத் திருவிழா கொடி இறக்கப்பட்டது. பங்குத் தந்தை ஆரோக்கியதாஸ் உள்பட திரளான கிறிஸ்தவா்கள் கலந்து கொண்டனா்.