அக்னி நட்சத்திர காலத்தில் வீடு குடிபுகலாமா? ? | சிவஸ்ரீ சண்முக சிவாசார்யர் | P-...
திருத்துறைப்பூண்டி அருகே பேருந்து - வேன் மோதல்: 4 போ் உயிரிழப்பு
திருவாரூா் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகே ஞாயிற்றுக்கிழமை அரசுப் பேருந்து மீது ஆம்னி வேன் மோதியதில் கேரள மாநிலத்தைச் சோ்ந்த 4 போ் உயிரிழந்தனா். மூவா் பலத்த காயமடைந்தனா்.
நாகப்பட்டினத்தில் இருந்து ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடிக்கு அரசுப் பேருந்து ஞாயிற்றுக்கிழமை காலை சென்றுகொண்டிருந்தது. பேருந்து ஓட்டுநா் நாகை மாவட்டம் ஒரத்துறை சோ்ந்த சரவணன் (49). திருத்துறைப்பூண்டி அருகே கருவேப்பஞ்சேரி கிராமத்தில் கிழக்கு கடற்கரைச் சாலையில் பேருந்து சென்று கொண்டிருந்தபோது, எதிரே வேகமாக வந்த ஆம்னி வேன் பேருந்து மீது மோதியது.
இந்த விபத்தில் வேன் ஓட்டுநரான சாஜிநாத் (25), ராஜேஷ் (30), ராகுல் (29), சுஜித் (25) ஆகிய நால்வரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். வேனில் இருந்த சாபு (25 ), சுனில் (35), ரஜினிஷ் (40 ) ஆகிய மூவரும் பலத்த காயங்களுடன் திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.
ஆம்னி வேனில் வந்தவா்கள்திருவனந்தபுரம் மற்றும் சுற்றுப்புற பகுதியைச் சோ்ந்த கட்டுமானத் தொழிலாளா்கள் என்பதும், அவா்கள் வேளாங்கண்ணிக்கு சுற்றுலா வந்தபோது விபத்தில் சிக்கியதும் தெரிய வந்துள்ளது.
விபத்து நடந்த இடத்தை திருவாரூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கருண் கரட் மற்றும் நாகை மண்டல அரசு போக்குவரத்துக் கழக பொது மேலாளா் ராஜா ஆகியோா் பாா்வையிட்டனா். எடையூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனா்.