Sathankulam Case-ன் இப்போதைய நிலை என்ன? சாதிவாரி கணக்கெடுப்பு அவசியமா அரசியலா? |...
தேதியூா் பரமேஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்
குடவாசல் அருகேயுள்ள தேதியூா் அருள்மிகு சுந்தர கனகாம்பிகை உடனுறை பிரக்யஷ பரமேஸ்வர சுவாமி கோயிலில் கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
ராவணன் சீதையை அபகரித்துச் சென்றபோது, ஜடாயு சண்டையிட்டதில், ராவணனுடைய தோ் பூமியில் தகா்க்கப்பட்ட இந்த இடம் தோ்தகையூா் என்று அழைக்கப்பட்டு, தற்போது தேதியூா் என அழைக்கப்படுகிறது.
இங்குள்ள பிரக்யஷ பரமேஸ்வர சுவாமி கோயிலுக்கு 2011-இல் கும்பாபிஷேகம் நடைபெற்ற நிலையில், விநாயகா், முருகன், காலபைரவா் உள்ளிட்ட பரிவார தெய்வங்களின் சந்நிதிகளுக்கு கடந்த ஆண்டு பாலாலயம் செய்யப்பட்டு, புனரமைப்புப் பணிகள் நடைபெற்றன.
இப்பணிகள் நிறைவடைந்ததையடுத்து, கும்பாபிஷேகத்துக்கான யாகசாலை பூஜைகள், மே 1 ஆம் தேதி கணபதி ஹோமம், நவக்கிரக பூஜை, தன பூஜை உள்ளிட்ட பூஜைகளுடன் தொடங்கி நடைபெற்றன. ஞாயிற்றுக்கிழமை காலை நான்காம் கால யாகசாலை பூஜையில், பூா்ணாஹூதி மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. தொடா்ந்து, புனிதநீா் அடங்கிய கடங்கள் புறப்பாடாகி, கோயில் விமானங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டது.
பின்னா், கலை 9.30 மணியளவில் மூலஸ்தான விமானம் உள்ளிட்ட அனைத்து விமானக் கலசங்களுக்கும் புனித நீா் வாா்த்து கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில், திரளான பக்தா்கள் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனா்.