செய்திகள் :

கிளாம்பாக்கத்தில் ஓடும் ஆட்டோவில் சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல்!

post image

கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் நின்றிருந்த 18 வயது மேற்கு வங்க சிறுமி ஆட்டோவில் கடத்திச் செல்லப்பட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்ட சம்பவத்தில் ஆட்டோ ஓட்டுநர் உள்பட மூன்று பேரை காவல்துறையினர் தேடி வருகிறார்கள்.

பெண்ணை ஆட்டோ ஓட்டுநர் கடத்திச் செல்வதை அறிந்த அப்பகுதியில் இருந்த சிலர், உடனடியாகக் காவல்துறைக் கட்டுப்பாட்டு மையத்துக்கு தொடர்புகொண்டு தகவல் கொடுத்ததைத் தொடர்ந்து, காவல்துறையினர் விரட்டிச் சென்றதால், பெண்ணை பாதி வழியில் இறக்கிவிட்டு குற்றவாளிகள் தப்பிச் சென்றுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது குறித்து தாம்பரம் காவல்துறை ஆணையர் கூறுகையில், அந்தச் சிறுமி மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர். சேலத்தில் பணியாற்றி வந்துள்ளார். மாதவரத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு வருவதற்காக சேலத்திலிருந்து திங்கள்கிழமை சென்னைக்குப் பேருந்தில் வந்துள்ளார். திங்கள்கிழமை இரவு அந்தப் பேருந்து கிளாம்பாக்கம் வந்துள்ளார். பேருந்து நிலையத்துக்கு வெளியே மாதவரம் செல்லும் பேருந்துக்காகக் காத்திருந்த போது, அங்கு வந்த ஆட்டோ ஓட்டுநர், மாதவரத்தில் விட்டுவிடுவதாகக் கூறியிருக்கிறார். ஆனால், அப்பெண் மறுத்துவிட்டதால், ஆட்டோ ஓட்டுநர், அப்பெண்ணை வலுக்கட்டாயமாக ஆட்டோவில் ஏற்றிச் சென்றிருக்கிறார்.

ஆட்டோ சிறிது தொலைவு சென்றதும், மேலும் சிலரும் ஆட்டோவில் ஏறியிருக்கிறார்கள். அவரது கழுத்தில் கத்தியை வைத்து, பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டுள்ளனர்.

ஆட்டோ ஜிஎஸ்டி சாலை மற்றும் இரும்புலியூர் வழியாகச் சென்று கொண்டிருந்தபோது, பெண்ணிக் அலறல் சப்தம் கேட்ட அப்பகுதியினர், காவல்துறை கட்டுப்பாட்டு மையத்துக்குத் தகவல் கொடுத்துள்ளனர்.

உடனடியாக விரைந்து சென்ற காவல்துறை வாகனம், ஆட்டோவை விரட்டிச் சென்ற போது, நெற்குன்றம் அருகே ஆட்டோவை நிறுத்தி அப்பெண்ணை இறக்கிவிட்டுவிட்டு அவர்கள் தப்பியோடியுள்ளனர். மூவரையும் தேடும் பணி நடைபெற்று வருகிறது என்று தெரிவித்துள்ளார்.

திருப்பரங்குன்றம் விவகாரம்: மாவட்ட ஆட்சியர் விளக்கம்!

மதுரை திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அமைதி பேணுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக மதுரை ஆட்சியர் சங்கீதா விளக்கமளித்துள்ளார்.திருப்பரங்குன்றம் விவகாரம் குறித்து மதுரை ஆட்சியர் சங்கீதா அறிக்கை ஒன்... மேலும் பார்க்க

கோவை: திருமணம் மீறிய உறவால் ஒருவர் கொலை!

கோவையில் மனைவியுடன் இருந்த கள்ளக் காதலனை வெட்டி படுகொலை செய்த கணவரைக் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.தஞ்சாவூரைச் சேர்ந்தவர் பிரபாகரன் ( 45). இவரது மனைவி மதுரையை சேர்ந்த வாணிப்பிரியா (42). இவர்களுக்கு... மேலும் பார்க்க

திருப்பரங்குன்றம் விவகாரம்: திமுக அமைச்சர்களுக்கு அண்ணாமலை கண்டனம்?

திருப்பரங்குன்ற விவகாரத்தில் பாஜகவினரை குற்றம் சாட்டிய அமைச்சர்களின் பேச்சுக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தமிழகத்தில் பாஜக கலவரத்தை ஏற்படுத்த... மேலும் பார்க்க

திமுக மாணவரணி ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்கும் ராகுல், அகிலேஷ்!

பல்கலைக்கழக மானியக் குழுவின் வரைவு நெறிமுறைகளுக்கு எதிா்ப்பு தெரிவித்து, தில்லியில் திமுக மாணவரணி சார்பில் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.வரைவு நெறிமுறைகளை திரும்பப்பெற வலியுறுத்தி, தில்லி ஜந... மேலும் பார்க்க

சென்னை உயர்நீதிமன்றத்துக்கு 2 நிரந்தர நீதிபதிகள்: கொலீஜியம் பரிந்துரை

சென்னை உயர்நீதிமன்றத்தில் உள்ள இரண்டு கூடுதல் நீதிபதிகளை நிரந்தர நீதிபதிகளாக்க உச்சநீதிமன்ற கொலீஜியம் மத்திய அரசுக்கு பரிந்துரைத்துள்ளது. தில்லியில் நடைபெற்ற உச்சநீதிமன்ற கொலீஜியத்தின் கூட்டத்தில், செ... மேலும் பார்க்க

மெளனம் பேசியதே தொடரில் ஜோவிதாவுக்கு பதிலாக புதிய நடிகை!

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் மெளனம் பேசியதே தொடரில் நடித்துவந்த நடிகை ஜோவிதா லிவிங்ஸ்டன் அத்தொடரில் இருந்து விலகியுள்ளார். ஜோவிதாவுக்கு பதிலாக நடிகை ஃபெளசி அத்தொடரில் நாயகியாக நடிக்கவுள்... மேலும் பார்க்க