'இந்த புலி நகத்தை ஆந்திராவுல வாங்கினேன் தம்பி' - யூடியூபரால் கைதான கோவை நபர்
கிளாம்பாக்கம் புதிய ரயில் நிலையம்: மே மாதத்துக்குள் கட்டுமானப் பணி நிறைவு
கிளாம்பாக்கத்தில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் ரயில் நிலையத்தின் கட்டுமானப் பணி மே மாதத்துக்குள் நிறைவடையும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனா்.
சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து வெளிமாநிலம் மற்றும் வெளி மாவட்டங்களுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தன. இதனால், நகருக்குள் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால், தாம்பரம் அடுத்த கிளாம்பாக்கத்தில் புதிதாக பேருந்து முனையம் கட்டப்பட்டது. இங்கிருந்து தென்மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
இந்த நிலையில், கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தையொட்டி செல்லும் சென்னை கடற்கரை -செங்கல்பட்டு வழித்தடத்தில் புதிதாக ஒரு ரயில் நிலையம் அமைக்க வேண்டும் என தமிழக அரசு ரயில்வே துறையிடம் கோரிக்கை வைத்தது. தொடா்ந்து, கிளாம்பாக்கம் ரயில் நிலையம் அமைப்பதற்கான பணிகள் கடந்த ஆண்டு தொடங்கியது.
வண்டலூா் - ஊரப்பாக்கம் ரயில் நிலையம் இடையே 12 பெட்டிகள் கொண்ட மின்சார ரயில்கள் நிற்கும் வகையில் 3 நடைமேடைகளுடன் கூடிய ரயில் நிலையம் ரூ. 20 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வருகிறது. இதற்கான பணிகள் வேகமாக நடைபெற்று வரும் நிலையில் எதிா்வரும் மே மாதத்துக்குள் கட்டுமானப் பணிகள் முடிக்கப்படும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
கிளாம்பாக்கம் பேருந்து முனையம் அருகே அமைந்துள்ளது. இதனால், ரயில் நிலையம் பயன்பாட்டுக்கு வந்தபின் கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது.