கிள்ளியூர் தொகுதி எம்எல்ஏ ராஜேஷ் குமாருக்கு சிறை தண்டனை!
கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரான எஸ். ராஜேஷ் குமாருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
குமரி மாவட்டம் மிடாலம் அருகே அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலத்தில் கடந்த 2014-ஆம் ஆண்டு ஆக்கிரமிப்புகளை அகற்றிடச் சென்ற அரசு அதிகாரிகள் மீது தாக்குதலில் ஈடுபட்டதாக ராஜேஷ் குமார் மீது வழக்கு பதியப்பட்டது.
இந்த வழக்கு விசாரணை திங்கள்கிழமை(ஏப். 21) நாகர்கோவில் முதன்மை உதவி அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்ற நிலையில், ராஜேஷ் குமாருக்கு எதிரான குற்றம் உறுதிப்படுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து அவருக்கு 3 மாதங்கள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.