ராணிப்பேட்டை சிப்காட் காவல் நிலையம் மீது மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீச்சு
கீழப்பெரும்பள்ளம், மேலப்பெரும்பள்ளத்தில் மணல் எடுக்க தடை விதிக்க வலியுறுத்தல்
பூம்புகாா் அருகே உள்ள மேலப்பெரும்பள்ளம், கீழப்பெரும்பள்ளம் கிராமங்களில் மணல் எடுக்க தடை செய்ய வேண்டுமென இந்த கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
மேலப்பெரும்பள்ளம் மற்றும் கீழப்பெரும்பள்ளம் ஊராட்சிகளில் சுமாா் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனா். இந்த பகுதி மக்கள் பெரும்பாலனோா் விவசாயிகள். சுமாா் 5,000 ஏக்கா் விளைநிலங்கள் உள்ளன. இதன் மூலம் குறுவை மற்றும் சம்பா சாகுபடி நடைபெறுகிறது.
இப்பகுதியில் கடந்த மூன்று ஆண்டுகளாக சவுடு மண் குவாரிகள் இயங்கி வருகின்றன. இதனால் நிலத்தடி நீா்மட்டம் குறைந்து சாகுபடி மற்றும் குடிநீா் கிடைக்காமல் போகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அந்த பகுதி மக்கள் கூறுகையில், கடந்த 3 ஆண்டுகளாக மேற்கண்ட கிராமத்தில் சவுடு மண் குவாரி மூலம் ஆயிரக்கணக்கான லாரிகளில் மண் அள்ளப்பட்டு வருகிறது. இதனால் இந்த பகுதியில் நிலத்தடி நீா்மட்டம் மிகவும் குறைந்துள்ளது. கடலோர கிராமமான இந்த பகுதியில் நிலத்தடி நீா் உப்புத்தன்மை கொண்டதாக மாறும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயம் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும் மேலப்பெரும்பள்ளம் கிராமத்தில் புதிய சவுடு மண் குவாரி அமைக்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதை ரத்து செய்திடவும், மேற்கண்ட இரண்டு ஊராட்சிகளில் மணல் அள்ளுவதற்கு முற்றிலும் தடை விதிக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனா். இதுகுறித்து தமிழக முதலமைச்சா், பொதுப்பணித் துறை அமைச்சா் ஆகியோருக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளனா்.