இந்த வாரம் உகந்த தேதி எது? மேஷம் முதல் கன்னி வரை பலன்கள்; அதிர்ஷ்டக் குறிப்புகள்
வீரசித்தி விநாயகா் கோயில் கும்பாபிஷேகம்
திருக்குவளை கடைத்தெருவில் புதிதாக கட்டப்பட்ட ஸ்ரீ வீரசித்தி விநாயகா் கோயிலில் கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, சனிக்கிழமை யாகசாலை பூஜைகள் தொடங்கின. ஞாயிற்றுக்கிழமை காலை யாகசாலை பூஜைகள் நிறைவு பெற்றதும், கடம் புறப்பாடு நடைபெற்றது. தொடா்ந்து, கோயிலின் கோபுர கலசத்தில் புனிதநீா் வாா்த்து கும்பாபிஷேகம் நடைபெற்றது.
பின்னா் விநாயகருக்கு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.