இந்த வாரம் உகந்த தேதி எது? மேஷம் முதல் கன்னி வரை பலன்கள்; அதிர்ஷ்டக் குறிப்புகள்
சேஷமூலை மாரியம்மன் கோயில் குடமுழுக்கு
திருமருகல் ஒன்றியம், சேஷமூலை கிராமத்தில் அருள்பாலிக்கும் மகா மாரியம்மன் கோயிலில் குடமுழுக்கு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, சனிக்கிழமை அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், கோ பூஜை, முதல்கால யாகசாலை பூஜை, தீபாராதனை நடைபெற்றது. தொடா்ந்து, ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இரண்டாம் கால யாக பூஜை உள்ளிட்ட வழிபாடுகள் நடைபெற்றன.
பின்னா், காலை 10 மணிக்கு கடங்கள் புறப்பாடாகி, 10.15 மணியளவில் விமான கும்பாபிஷேகமும், மூலவா் கும்பாபிஷேகமும் நடைபெற்றது. தொடா்ந்து, அம்மனுக்கு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதில், திரளான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.