‘சிஸ்டம் கெட்டுப்போச்சு!’ பிகாரிலும் இந்தியாவிலும் மிக மோசமான சூழல்! -லாலுவின் ம...
கீழே தவறினாலும் உடையாத ஸ்மார்ட்போன்! அடுத்த மாதம் வெளியாகிறது ஓப்போ எஃப் 31!
ஓப்போ எஃப் 31 வரிசையில் புதிய ஸ்மார்ட்போன்களை ஓப்போ நிறுவனம் அடுத்த மாதம் அறிமுகம் செய்யவுள்ளது.
கடந்த மார்ச் மாதம், எஃப் 29 வரிசையில் புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்த நிலையில், இந்த ஆண்டில் இரண்டாவது முறையாக, எஃப் 31 வரிசையில் புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யவுள்ளது. இவை செப்டம்பர் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கீழே தவறி விழுந்தாலும் உடையாத வகையில், சேதம் ஏற்படாத வகையில் கவச உரையுடன் தயாரிக்கப்படுகிறது. மேலும், 7,000mAh பேட்டரி திறன் கொடுக்கப்பட்டுள்ளது. இவை இரண்டும் இந்த வரிசை ஸ்மார்ட்போன்களின் சிறப்புகளாக பார்க்கப்படுகின்றன.
எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள் என்னென்ன?
ஓப்போ எஃப் 31 வரிசையில், ஓப்போ எஃப் 31 மற்றும் ஓப்போ எஃப் 31 ப்ரோ ஆகிய இரு ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாகவுள்ளன.
இந்த, இரு ஸ்மார்ட்போன்களுமே 7,00mAh பேட்டரி திறனுடனும், சேதம் ஏற்படாத வகையில் 360 டிகிரி கவச உரையுடனும் தயாரிக்கப்படுகின்றன.
அலுமினியம் கலவை உரையுடனும் வைரத்தால் வெட்டப்பட்ட மூலைகளுடனும் அதிர்வுகளை தாங்கிக்கொள்ளும் அம்சங்களுடனும் தயாரிக்கப்படுகின்றன.
இயக்கம், செயல்திறன் போன்றவற்றில் எஃப் 29 வரிசை ஸ்மார்ட்போனகளை விட மேம்பட்ட அம்சங்களுடன் தயாரிக்கப்பட வாய்ப்புள்ளது.
ஓப்போ எஃப் 29 ப்ரோவில் உள்ளதைப்போன்று மீடியா டெக்டைமன்சிட்டி புராசஸர் பயன்படுத்தப்படவுள்ளது.
இதையும் படிக்க | ஒரு முறை சார்ஜ் செய்தால் 46 மணிநேரம் பேசலாம்! ஹானர் எக்ஸ் 7 சி அறிமுகம்!