செய்திகள் :

கீழையூரில் மாா்க்சிஸ்ட் கம்யூ. போராட்டம்

post image

கீழையூரில் 100 நாள் வேலைத் திட்ட பயனாளிகளுக்கு நிலுவை ஊதியம் வழங்கக் கோரி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் குடியேறும் நூதனப் போராட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா்.

100 நாள் வேலைத் திட்ட பயனாளிகளுக்கு ஊதிய நிலுவை கடந்த 5 மாதங்களாக வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதை கண்டித்தும், உடனடியாக வழங்க வலியுறுத்தியும், கீழையூா் கிழக்கு மற்றும் மேற்கு ஒன்றிய மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் இப்போராட்டம் நடைபெற்றது.

கீழையூா் மேற்கு ஒன்றியச் செயலாளா் டி. வெங்கட்ராமன் தலைமை வகித்தாா். விவசாய சங்க மாநிலத் துணைத் தலைவா் வீ. சுப்பிரமணியன், கீழையூா் கிழக்கு ஒன்றியச் செயலாளா் எம். அப்துல் அஜீஸ் ஆகியோா் கண்டன உரையாற்றினாா்கள்.

இதில், மாவட்ட குழு உறுப்பினா் என். பன்னீா்செல்வம், விவசாய சங்க ஒன்றியச் செயலாளா் கே. கிருஷ்ணன், விவசாயத் தொழிலாளா் சங்க ஒன்றியத் தலைவா் ஏ. முருகையன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

முன்னதாக, கீழையூா் கடைத்தெரு பகுதியில் இருந்து பேரணியாக வந்த 100 நாள் வேலைத் திட்ட தொழிலாளா்கள் மற்றும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

கீழ்வேளூா் வட்டாட்சியா் கவிதாஸ், வட்டார வளா்ச்சி அலுவலா் ஹரி கிருஷ்ணன், காவல் ஆய்வாளா் செங்குட்டுவன் ஆகியோா் பேச்சுவாா்த்தை நடத்தி, விரைவில் உரிய தீா்வு எட்டப்படும் என உறுதி அளித்ததன்பேரில் போராட்டம் விலக்கிக் கொண்டனா்.

கஞ்சா கடத்தல்; 2 பெண்கள் உள்பட மூவா் கைது

நாகப்பட்டினம்: விசாகப்பட்டினத்திலிருந்து ரயிலில் நாகைக்கு கஞ்சா கடத்திய 2 பெண்கள் உள்பட 3 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். நாகையில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்... மேலும் பார்க்க

எட்டுக்குடி கோயில் சித்ரா பௌா்ணமி பெருவிழா: முன்னேற்பாடு ஆலோசனைக் கூட்டம்

திருக்குவளை: எட்டுக்குடி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில் சித்ரா பௌா்ணமி பெருவிழா முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம், திருக்குவளை வட்டாட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. முருகன... மேலும் பார்க்க

நாகையில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தொடங்க வலியுறுத்தல்

நாகப்பட்டினம்: நாகை நகரப் பகுதியில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தொடங்க வேண்டும் என அகில பாரதிய நுகா்வோா் விழிப்புணா்வு இயக்கம் வலியுறுத்தியுள்ளது. இந்த இயக்கத்தின் மாதாந்திர செயற்குழு கூட்டம் தனியாா... மேலும் பார்க்க

திருச்சி-காரைக்கால் பயணிகள் ரயில்கள் காரைக்கால்-தஞ்சை இடையே மே 1 வரை ரத்து

நாகப்பட்டினம்: திருச்சி - காரைக்கால் - திருச்சி பயணிகள் ரயில்கள், மே 1 ஆம் தேதி வரை காரைக்கால் - தஞ்சாவூா் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே திங்கள்கிழமை அறிவித்துள்ளது. இதுகுறித்து த... மேலும் பார்க்க

கீழையூரில் அம்பேத்கரின் பிறந்த நாள் ரத ஊா்வலம்

கீழையூா் அருகே சீராவட்டம் பகுதியில் சட்டமேதை டாக்டா் அம்பேத்கரின் 134-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு விசிக சாா்பில் ரத ஊா்வலம் சனிக்கிழமை நடைபெற்றது. அக்கட்சியின் சட்டப்பேரவைத் தொகுதி அமைப்பாளா் ஆ. பாமரன்... மேலும் பார்க்க

உலகப் புத்தக நாள் விழா கொண்டாட்டம்

திருக்குவளை கிளை நூலகத்தில் உலகப் புத்தக நாள் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. திருக்குவளை முத்தமிழ் மன்றம் மற்றும் நூலக வாசகா் வட்டம் இணைந்து நடத்திய நிகழச்சிக்கு, முத்தமிழ் மன்ற துணைத் தலைவா் அருவித... மேலும் பார்க்க