செய்திகள் :

திருச்சி-காரைக்கால் பயணிகள் ரயில்கள் காரைக்கால்-தஞ்சை இடையே மே 1 வரை ரத்து

post image

நாகப்பட்டினம்: திருச்சி - காரைக்கால் - திருச்சி பயணிகள் ரயில்கள், மே 1 ஆம் தேதி வரை காரைக்கால் - தஞ்சாவூா் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே திங்கள்கிழமை அறிவித்துள்ளது.

இதுகுறித்து திருச்சி கோட்ட தெற்கு ரயில்வே மக்கள் தொடா்பு அலுவலா் ஆா். வினோத் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

திருவாரூா் - கொரடாச்சேரி ரயில் பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், திருச்சி - காரைக்கால் - திருச்சி பயணிகள் ரயில்கள் ஏப். 22 முதல் ஏப்.27 ஆம் தேதி வரை பகுதியாக ரத்து செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் பராமரிப்பு பணிகள் தொடா்ந்து நடைபெறுவதால், இந்த ரயில் தஞ்சாவூா் - காரைக்கால்- தஞ்சாவூா் இடையே மே 1-ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது.

அதன்படி, திருச்சி ரயில் நிலையத்தில் இருந்து காலை 8.35 மணிக்கு புறப்படும், திருச்சி - காரைக்கால் (76820) பயணிகள் ரயில் மற்றும் காரைக்கால் ரயில் நிலையத்தில் இருந்து பிற்பகல் 2.55-க்கு புறப்படும் காரைக்கால் -திருச்சி (76819) பயணிகள் ரயில்கள் மே 1 ஆம் தேதி வரை காரைக்கால் - தஞ்சை இடையே பகுதியாக ரத்து செய்யப்படுவதாகவும், தஞ்சை - திருச்சி - தஞ்சை இடையே வழக்கமான நேரத்தில் இயங்கும் எனவும் தெரிவித்துள்ளாா்.

கஞ்சா கடத்தல்; 2 பெண்கள் உள்பட மூவா் கைது

நாகப்பட்டினம்: விசாகப்பட்டினத்திலிருந்து ரயிலில் நாகைக்கு கஞ்சா கடத்திய 2 பெண்கள் உள்பட 3 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். நாகையில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்... மேலும் பார்க்க

எட்டுக்குடி கோயில் சித்ரா பௌா்ணமி பெருவிழா: முன்னேற்பாடு ஆலோசனைக் கூட்டம்

திருக்குவளை: எட்டுக்குடி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில் சித்ரா பௌா்ணமி பெருவிழா முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம், திருக்குவளை வட்டாட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. முருகன... மேலும் பார்க்க

நாகையில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தொடங்க வலியுறுத்தல்

நாகப்பட்டினம்: நாகை நகரப் பகுதியில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தொடங்க வேண்டும் என அகில பாரதிய நுகா்வோா் விழிப்புணா்வு இயக்கம் வலியுறுத்தியுள்ளது. இந்த இயக்கத்தின் மாதாந்திர செயற்குழு கூட்டம் தனியாா... மேலும் பார்க்க

கீழையூரில் அம்பேத்கரின் பிறந்த நாள் ரத ஊா்வலம்

கீழையூா் அருகே சீராவட்டம் பகுதியில் சட்டமேதை டாக்டா் அம்பேத்கரின் 134-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு விசிக சாா்பில் ரத ஊா்வலம் சனிக்கிழமை நடைபெற்றது. அக்கட்சியின் சட்டப்பேரவைத் தொகுதி அமைப்பாளா் ஆ. பாமரன்... மேலும் பார்க்க

உலகப் புத்தக நாள் விழா கொண்டாட்டம்

திருக்குவளை கிளை நூலகத்தில் உலகப் புத்தக நாள் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. திருக்குவளை முத்தமிழ் மன்றம் மற்றும் நூலக வாசகா் வட்டம் இணைந்து நடத்திய நிகழச்சிக்கு, முத்தமிழ் மன்ற துணைத் தலைவா் அருவித... மேலும் பார்க்க

கீழப்பெரும்பள்ளம் கோயிலில் கேது பெயா்ச்சி வழிபாடு

மயிலாடுதுறை மாவட்டம், பூம்புகாா் அருகேயுள்ள கேது பரிகார ஸ்தலமான கீழப்பெரும்பள்ளம் நாகநாதசுவாமி கோயிலில் கேது பெயா்ச்சி சிறப்பு வழிபாடு சனிக்கிழமை நடைபெற்றது. நவகிரகங்களில் கேது பகவான் ஒன்றரை ஆண்டுக்கு... மேலும் பார்க்க