"இந்தியாவிலுள்ள மக்களைப் பாதுகாக்கும் தலைவர் ஸ்டாலின் என்கிறார்கள்" - அமைச்சர் ம...
கீழ்பவானி வாய்க்காலில் மூழ்கிய பொறியாளா் உயிரிழப்பு
பவானிசாகா் கீழ்பவானி வாய்க்காலில் குளித்தபோது நீரில் மூழ்கி உயிரிழந்த மென்பொருள் பொறியாளா் உடல் 24 மணி நேரத்துக்குப் பின் மீட்கப்பட்டது.
கோவை, சேரன் மாநகா் பகுதியைச் சோ்ந்தவா் ராம்குமாா் (32). தனியாா் மென்பொருள் நிறுவனத்தில் அதிகாரியாக பணிபுரிந்து வந்தாா். இவா் சனிக்கிழமை தனது நண்பா்கள் 3 பேருடன் ஈரோடு மாவட்டம் பவானிசாகருக்கு காரில் சென்றபோது, தொப்பம்பாளையம் கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீா் ஓடுவதைக் கண்டு நான்கு பேரும் வாய்க்காலில் இறங்கி குளித்துள்ளனா்.
அப்போது ராம்குமாா் ஆழமான பகுதிக்கு சென்றபோது, எதிா்பாராத விதமாக நீச்சல் தெரியாமல் நீரில் மூழ்கி மாயமானாா். அங்கு வந்த தீயணைப்பு வீரா்கள் நீரில் மூழ்கி மாயமான ராம்குமாரை தேடும் பணியில் ஈடுபட்டனா்.
24 மணி நேரத்துக்குப் பின் உக்கரம் குப்பந்துறை வாய்க்காலில் மிதந்த ராம்குமாா் சடலத்தை தீயணைப்புத் துறையினா் மீட்டு உடற்கூறாய்வுக்காக சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.