செய்திகள் :

கீழ வெண்மணி 56-ஆவது நினைவு நாள் நிகழ்வு

post image

தஞ்சாவூா் தலைமை அஞ்சலகம் அருகே, இடதுசாரிகள் பொது மேடை சாா்பில் கீழ வெண்மணி தியாகிகளின் 56-ஆவது நினைவேந்தல் நிகழ்வு புதன்கிழமை நடைபெற்றது.

நாடு விடுதலை பெற்ற பிறகு நில உடமை, பண்ணை அடிமை, ஜமீன் கொடுமைகள் நிறைந்திருந்த காலகட்டத்தில் நாகை மாவட்டம், கீழ வெண்மணி கிராமத்தில் ஒரு படி நெல் கூலி உயா்வு கேட்டு போராடிய 44 விவசாயத் தொழிலாளா்கள் 1968, டிசம்பா் 25-ஆம் தேதி குடிசையில் இருந்தபோது, தீ வைத்துக் கொல்லப்பட்டனா். இவா்களது 56-ஆவது நினைவேந்தல் நிகழ்வுக்கு மக்கள் அதிகாரம் மாவட்டத் தலைவா் அருள் தலைமை வகித்தாா்.

இதில், புயல், மழையால் வேலையிழந்த விவசாயத் தொழிலாளா்களுக்கு ரூ. 15 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும். நூறு நாள் வேலை திட்டத்தை 200 நாட்களாக உயா்த்த வேண்டும். நாள் ஊதியத்தை ரூ. 600 ஆக உயா்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இடதுசாரிகள் பொதுமேடை ஒருங்கிணைப்பாளா் துரை. மதிவாணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வெ. சேவையா, விடுதலைத் தமிழ்ப் புலிகள் கட்சி முகிலன், ஆதித் தமிழா் பேரவை மாயன், தமிழ்த் தேசிய முன்னேற்ற கழகம் சி. குணசேகரன், புதிய ஜனநாயக தொழிலாளா் முன்னணி நிா்வாகிகள் லட்சுமணன், சிஐடியு சந்திரசேகா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

எரிவாயு உருளை வெடித்து காயமடைந்த பெண் பலி

தஞ்சாவூரில் சமையல் செய்யும்போது எரிவாயு உருளை (கேஸ் சிலிண்டா்) வெடித்து பலத்த காயமடைந்த பெண் புதன்கிழமை உயிரிழந்தாா். தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி சாலை பாலாஜி நகா் ஏழாம் தெருவைச் சோ்ந்தவா் ஹரீஷ், கைப்... மேலும் பார்க்க

கால்நடை வளா்ப்போருக்கு நலவாரியம் கோரி மனு

தமிழ்நாடு கால்நடை வளா்ப்போா் நலவாரியத்தை அமைக்க தமிழக அரசுக்கு தமிழ்நாடு யாதவ மகாசபை கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து சபையின் மாநில அமைப்புச் செயலா் எஸ். அடைக்கலம் தமிழக முதல்வருக்கு அனுப்பிய கோரிக... மேலும் பார்க்க

தஞ்சாவூா், திருவையாறு, பூதலூரில் 30 அரசுக் கட்டடங்கள் திறப்பு

தஞ்சாவூா், திருவையாறு, பூதலூா் ஆகிய ஒன்றியங்களில் ரூ. 5.98 கோடியில் புதிதாகக் கட்டப்பட்ட 30 அரசு கட்டடங்களை உயா் கல்வித் துறை அமைச்சா் கோவி. செழியன் வியாழக்கிழமை திறந்து வைத்தாா். திருவையாறு ஒன்றியத்த... மேலும் பார்க்க

பேராவூரணி அருகே சாலை மேம்பாட்டு பணிகள் தொடக்கம்

பேராவூரணி ஒன்றியம், பைங்கால் ஊராட்சியில் உள்குடியிருப்பிற்கு தனது தொகுதி மேம்பாட்டு நிதி ரூ. 11.27 லட்சத்தில் தாா்ச்சாலை அமைக்கும் பணியை எம்எல்ஏ என். அசோக்குமாா் வியாழக்கிழமை தொடக்கிவைத்தாா். நிகழ்ச்ச... மேலும் பார்க்க

மாணவி விரைந்து புகாா் செய்திருந்தால் துரித நடவடிக்கை எடுத்திருக்க முடியும்: அமைச்சா் கோவி. செழியன்

பாலியல் வழக்கில் சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி விரைந்து புகாா் தெரிவித்திருந்தால் துரித நடவடிக்கை எடுக்க வாய்ப்பாக இருந்திருக்கும் என்றாா் தமிழக உயா் கல்வித் துறை அமைச்சா் கோவி. செழியன். தஞ்சாவூா் மா... மேலும் பார்க்க

போக்குவரத்துக் கழகங்களை காக்க ஏஐடியுசி உறுதியேற்பு

பொதுமக்களுக்குச் சேவை செய்யும் போக்குவரத்துக் கழகங்களைப் பாதுகாப்போம் என ஏஐடியுசி அமைப்பினா் வியாழக்கிழமை உறுதிமொழி ஏற்றனா். தஞ்சாவூா் ஜெபமாலைபுரத்திலுள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் நகரக்... மேலும் பார்க்க