குகேஷின் விடாமுயற்சி இளைஞர்களுக்கு முன்மாதிரி: மு.க. ஸ்டாலின்
குகேஷின் விடாமுயற்சி இளைஞர்களுக்கு முன்மாதிரியாக உள்ளதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இளம் வயதில் உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற டி. குகேஷுக்கு தமிழக அரசு சார்பில் சென்னை கலைவாணர் அரங்கில் இன்று (டிச. 17) பாராட்டு விழா நடத்தப்பட்டது. இதில் குகேஷுக்கு பொன்னாடை போர்த்தி ரூ. 5 கோடி ரூபாய்க்கான காசோலையை பரிசாக வழங்கினார்.
இந்த விழாவில் முதல்வர் மு.க. ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், செஸ் கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
புதிய சாதனை படைத்திருக்கிறார் நம்ம பையன், சென்னை பையன் குகேஷ். நம்ம குகேஷை பாராட்டுகிறேன்.
தனது உழைப்பாலும், திறமையாலும் உலக சாம்பியன்ஷிப் பட்டம் வென்றுள்ளார் குகேஷ்
உலக சாம்பியனாக குகேஷ் சாதனை படைக்க குகேஷ் எடுத்துக்கொண்டது 11 ஆண்டுகள்தான். குகேஷின் விடாமுயற்சியை தமிழக இளைஞர்கள் முன்மாதிரியாக எடுத்துக்கொள்ள வேண்டும்
செஸ் விளையாட்டை ஊக்குவிக்க ஹோம் ஆஃப் செஸ் என்ற சிறப்பு அகாதெமி அமைக்கப்படும்.
கல்வி, விளையாட்டு இரண்டிலும் தமிழக இளைஞர்கள் சாதிக்க வேண்டும். பொறுமை, விடாமுயற்சி இருந்தால் வாழ்க்கையில் வெற்றி பெறலாம் என முதல்வர் பேசினார்.