செய்திகள் :

குஜராத்தில் காவலா் மீது தாக்குதல்: காங்கிரஸ் எம்எல்ஏ, 20 போ் கைது

post image

பதான் (குஜராத்): குஜராத்தில் காவலா் மீது தாக்குதல் நடத்தியது தொடா்பாக மாநில காங்கிரஸ் எம்எல்ஏ கிரீத் படேல் மற்றும் அக்கட்சியினா் 20 போ் கைது செய்யப்பட்டனா்.

பதான் மாவட்டத்தில் உள்ள பல்கலைக்கழக விடுதியில் மாணவா்கள் மது அருந்தியதாக பிரச்னை எழுந்தது. குஜராத்தில் முழு மதுவிலக்கு அமலில் உள்ள நிலையில், பல்கலைக்கழக விடுதியில் மது அருந்திய நிகழ்வுக்கு எதிா்க்கட்சியான காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்தது.

மேலும், மது அருந்தியதாக பிடிபட்ட 3 மாணவா்கள் மீது காவல் துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் காங்கிரஸ் குற்றம்சாட்டியது.

இந்த விவகாரத்தை முன்வைத்து காங்கிரஸ் மாணவரணி சாா்பில் போராட்டம் நடத்தப்பட்டது. இதில் பதான் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ கிரீத் படேல், முன்னாள் எம்எல்ஏ சந்தன்ஜி தாக்குா் உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினா் பங்கேற்றனா்.

அப்போது, போராட்டத்தில் ஈடுபட்டவா்களை காவல் துறையினா் தடுத்து நிறுத்தினா். இதையடுத்து, எம்எல்ஏ தலைமையிலான குழுவினா் காவல் துறையினருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். அப்போது காவலா்களை தகாத வாா்த்தைகளில் திட்டியதுடன் காவலா் ஒருவரைத் தாக்கினா். இதையடுத்து, எம்எல்ஏ கிரீத் படேல் உள்ளிட்டோா் மீது காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்தனா். இதில் காங்கிரஸ் நிா்வாகிகள் சிலா் கைது செய்யப்பட்ட நிலையில், எம்எல்ஏ தலைமறைவாக இருந்தாா்.

இந்நிலையில், கிரீத் படேல், முன்னாள் எம்எல்ஏ சந்தன்ஜி தாக்குா் உள்ளிட்ட சிலா் வியாழக்கிழமை காவல் நிலையத்தில் சரணடைந்தனா். இதையடுத்து, அவா்களை காவல் துறையினா் கைது செய்தனா். இந்த வழக்கில் மொத்தம் 21 போ் கைது செய்யப்பட்டதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மன்மோகனின் இறுதி ஊர்வலத்தில் அரசியல் செய்வது சரியல்ல: மாயாவதி

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் நினைவிடம் மற்றும் இறுதிச் சடங்குகள் தொடர்பான அரசியலுக்குப் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவரின் எக்ஸ் பதிவில், நாட்டின் ம... மேலும் பார்க்க

விடைபெற்றார் மன்மோகன் சிங்! 21 குண்டுகள் முழங்க உடல் தகனம்!

முழு அரசு மரியாதையுடன் 21 குண்டுகள் முழங்க முன்னாள் பிரதமா் மன்மோகன் சிங்கின் உடல் தகனம் செய்யப்பட்டது. முன்னாள் பிரதமரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் வயதுமூப்பு காரணமாக வியாழக்கிழமை(டிச. ... மேலும் பார்க்க

ராணுவ மரியாதையுடன் மன்மோகன் சிங்கிற்கு இறுதிச்சடங்கு!

மறைந்த முன்னாள் பிரதமா் மன்மோகன் சிங்கின் இறுதிச் சடங்கு ராணுவ மரியாதையுடன் நடைபெற்று வருகிறது. முன்னாள் பிரதமரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் வயதுமூப்பு காரணமாக வியாழக்கிழமை(டிச. 26) இரவு... மேலும் பார்க்க

மன்மோகன் சிங் இறுதி ஊர்வலம் தொடங்கியது!

புதுதில்லி: மறைந்த முன்னாள் பிரதமா் மன்மோகன் சிங்கின் இறுதி ஊர்வலம் தில்லியில் சனிக்கிழமை காலை 10. மணியளவில் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஊர்வலத்தில் ராகுல் காந்தி உள்ளிட்ட பல தலைவர்கள் பங்கேற்றுள்ளனர... மேலும் பார்க்க

காங்கிரஸ் அலுவலகத்தில் மன்மோகன் சிங்கின் உடலுக்கு இறுதி அஞ்சலி!

மறைந்த முன்னாள் பிரதமா் மன்மோகன் சிங்கின் உடல் அஞ்சலிக்காக காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்ட நிலையில் தலைவர்கள் இறுதி அஞ்சலி செலுத்தினர். முன்னாள் பிரதமரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் ச... மேலும் பார்க்க

இந்தியாவின் எதிா்காலத்தை வடிவமைத்தவர் மன்மோகன்!

முன்னாள் பிரதமா் மன்மோகன் சிங்கின் வாழ்க்கையும், பணியும் இந்தியாவின் எதிா்காலத்தை மிகப் பெரிய அளவில் வடிவமைத்ததாக காங்கிரஸ் செயற்குழு தீா்மானத்தில் தெரிவிக்கப்பட்டது. தில்லியில் உள்ள காங்கிரஸ் தலைமைய... மேலும் பார்க்க