குஜராத்: ஐஃபோன் 16 ப்ரோவை லஞ்சமாகக் கேட்ட காவல் ஆய்வாளர்; கையும் களவுமாகச் சிக்கியது எப்படி?
குஜராத் மாநிலம் நவ்சாரி மாவட்டத்தின் தொலை துறைமுகத்தில் அமைந்துள்ள மரைன் (Marine) காவல் நிலையத்தின் காவல் ஆய்வாளராகப் பணிபுரிபவர் தினேஷ் குபாவட்.
தினேஷ் குபாவட் ஒரு முறை துறைமுகத்தில் உள்ள லைட் டீஸல் ஆயில் (LDO -Light Diesel Oil) வியாபாரி ஒருவரை, அவரது உரிமம் மற்றும் மற்ற ஆவணங்களை எடுத்துக்கொண்டு காவல் நிலையம் வருமாறு கூறியுள்ளார். இவர் தொலை துறைமுகத்தில் படகு உரிமையாளர்களிடம் டீஸல் விற்கும் உரிமம் பெற்ற வியாபாரி ஆவார்.
இருவரும் நேரில் சந்திக்கையில், தினேஷ் குபாவட் அந்த வியாபாரியை மிரட்டத் தொடங்கியுள்ளார். "உன் வியாபாரத்தை இங்குத் தொடர வேண்டும் என்றால் ₹1.44 லட்சம் மதிப்புள்ள ஐபோன் 16 ப்ரோவை லஞ்சமாகக் கொடு" எனக் கேட்டிருக்கிறார்.
இதனால் லஞ்ச ஒழிப்புப் பிரிவு காவலர்களிடம் அந்த வியாபாரி புகார் அளித்துள்ளார். நவம்பர் 15ஆம் தேதியன்று அந்த வியாபாரி தினேஷ் குபாவட்டிடம் ஐபோன் 16 ப்ரோவைக் கொடுக்கும்போது, குஜராத் ஊழல் தடுப்புப் பிரிவு காவலர்களிடம் சிக்கிக்கொண்டார். அதிகாரிகள் குபாவட்டை கைது செய்துள்ளனர்.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...