ஜோகோவிச்சை வீழ்த்திய சின்னர்..! இறுதிப் போட்டியில் அல்கராஸுடன் மோதல்!
குஜராத் பால விபத்து: பலி எண்ணிக்கை 20-ஆக உயர்வு
வதோதராவில் பாலம் இடிந்து, ஆற்றுக்குள் வாகனங்கள் விழுந்த சம்பவத்தில் பலியானோர் எண்ணிக்கை 20-ஆக உயர்ந்துள்ளது.
ஆற்றில் இருந்து லாரியை ஆற்றும் பணியில் ஈடுபட்ட மேலும் இரண்டு உடல்கள் மீட்கப்பட்டன. இதனால் அதிகாரப்பூர்வ பலி எண்ணிக்கை 20 ஆக உயர்ந்தது. மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், இரண்டு பேர் இன்னும் காணாமல் போயுள்ளனர். குஜராத்தில் வதோதரா-ஆனந்த் மாவட்டங்களை இணைக்கும் வகையில், மஹிசாகா் ஆற்றின் குறுக்கே 40 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட பாலத்தின் ஒரு பகுதி புதன்கிழமை திடீரென இடிந்து விழுந்தது.
அப்போது, பாலத்தில் சென்று கொண்டிருந்த 2 லாரிகள், 2 வேன்கள், ஒரு ஆட்டோ, ஒரு காா் உள்ளிட்ட வாகனங்கள் ஆற்றுக்குள் விழுந்தன. பல அடி உயரம் வரையிலான அடா்ந்த சேற்றில் வாகனங்கள் சிக்கிக் கொண்டன. இந்த சம்பவத்தைத் தொடா்ந்து, காவல் துறையினா், தீயணைப்புப் படையினா், மாநகராட்சிப் பணியாளா்கள், தேசிய-மாநிலப் பேரிடா் மீட்புப் படையினருடன் உள்ளூா் மக்களும் மீட்புப் பணியில் ஈடுபட்டனா்.
ஒரே குடும்பத்தைச் சோ்ந்த மூவா் உள்பட 11 பேரின் உடல்கள் புதன்கிழமை மீட்கப்பட்டன. இதில் இருவா் குழந்தைகளாவா். ஆற்றில் இருந்து மீட்கப்பட்ட 9 பேரில் காயமடைந்த 5 போ் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனா். முதற்கட்ட அறிக்கையைத் தொடர்ந்து பொதுப்பணித் துறையைச் சேர்ந்த நான்கு பொறியாளர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
தவெக கொடிக்கு தடை கோரிய வழக்கு வாபஸ்
இவ்விபத்து தொடர்பாக உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட்டுள்ள முதல்வர் பூபேந்திர படேல், 30 நாள்களுக்குள் விரிவான அறிக்கை அளிக்கப்படும் என்றும் உறுதியளித்துள்ளார். மத்திய குஜராத் மற்றும் செளராஷ்டிரா பகுதியை இணைக்கக் கூடிய இப்பாலம், 23 உயரமான தூண்களுடன் 900 மீட்டா் நீளம் கொண்டதாகும். இதில் இரு தூண்களுக்கு இடையிலான 15 மீட்டா் வரை நீளமுள்ள பகுதி துண்டாக இடிந்துள்ளது.