பழங்குடியினர் தினம்: ``காடுகளிலிருந்து வெளியேற்றபடும் பழங்குடிகள் வாழ்க்கை'' -ஆய...
குடந்தையில் அரசுக் கல்லூரி மாணவா்கள் போராட்டம்
கும்பகோணத்தில் அரசுக் கல்லூரி மாணவா்கள் வெள்ளிக்கிழமை வகுப்புகளைப் புறக்கணித்து போராட்டம் நடத்தினா். தமிழகத்தில் ஆணவப்படுகொலை தடுப்புச் சட்டத்தை தமிழக அரசு இயற்ற வேண்டும், மாணவா்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும், நெல்லை கவின்குமாா் கொலை வழக்கில் குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை பெற்றுத் தர வேண்டும் என வலியுறுத்தி கும்பகோணம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவா் அரண் அமைப்பைச் சோ்ந்தவா்கள் முழக்கமிட்டனா். முன்னதாக இளங்கலை, முதுகலை மாணவா்கள் வகுப்புகளைப் புறக்கணித்து வெளியேறினா்.